அரசியல் அதிகாரம் :
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பல மொழி பேசும் மாநிலங்கள் பல மதத்தை பின்பற்றும் மக்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற நாடு நம் நாடு. பாராளுமன்ற ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நம் நாட்டில் ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை உயிரோட்டமானதாகவும் உணர்வுள்ளதாகவும் அமைந்திட வேண்டும். அப்படிப்பட்ட தலைமை அமையப் பெற்ற சமூகங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.
நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகியும் தமிழக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லிம் சமூகத்திற்கென்று ஒருங்கிணைந்த வலுவான அரசியல் தலைமை இல்லாமல் போனதுதான் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணம் நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிஷன் அறிக்கை இந்த கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. இதற்கு மூல காரணம் முஸ்லிம் களிடையே அரசியல் அதிகாரம் குறித்த ஆர்வமும் விழிப்புணர்வும் இல்லாமல் போனதே. மேலும் அரசியல் ஹராம் என்ற நச்சுக் கருத்துக்கள் சுயநலத்தின் அடிப்படையில் மக்களிடையே திட்டமிட்டு பரப்பப்பட்டதுமே இப்பொழுது மக்கள் சற்று தெளிவு பெற்று வருகின்றனர். முஸ்லிம்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளுக்கு அரசியல் அதிகாரம் தான் தீர்வு என்ற கருத்தினை ஆணி அடித்தார் போல மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
இளைய சமுதாயத்தின் கவனம் அரசியல் அதிகாரத்தின் பக்கம் திருப்பப்பட வேண்டும் என்ற முஸ்லிம் சமுதாயத்தின் உண்மையான சமூக வளர்ச்சியின் ப்க்கம் மக்களை ஈர்க்கும் பணியில் சமூக நீதி அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றது.
ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!!
