நோக்கம்:
சமூக நீதி அறக்கட்டளை என்பது முஸ்லிம் சமூகத்தில் கல்விப்புரட்சியை ஏற்படுத்துவதும் அரசியல் அதிகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே அதன் முக்கிய குறிக்கோள்.
கல்வி:
இந்திய நாட்டில் முஸ்லிம் சமூகத்தில் தான் பள்ளிப்பபடிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமை அதிகமாக நடைபெறுகிறது என்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது முற்றிலும் சரியென்பதை நடைமுறையில் நம் சமூகத்தில் பார்த்து வருகிறோம்.
இனிவரும் காலம் என்பது கல்வி கற்றவனுக்கு மட்டுமே உகந்த காலமாக அமையும் என்பதே நிதர்சமான உண்மை. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அந்த சமூகம் பெறுகின்ற கல்வியறிவு தான் அடிப்படை சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு அறிவுச் செல்வத்தை கொடுக்கும் இந்த அற்புதமான பணியில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்…!
வரலாறு:
எந்த சமூகம்தான் கடந்து வந்த வரலாற்றை அறிந்திருக்கவில்லையோ அந்த சமூகம் அவர்கள் காலத்திலேயே வரலாற்று திரிபுகளால் அழிக்கப்படுவார்கள். முஸ்லிம் சமூகத்தின் வீரமிகு வரலாறு அனைத்தும் இன்ஷா அல்லாஹ் விரைவில் தோண்டி எடுக்கப்பட்டு புத்தகங்களாக ஆவணமாக்கப்படும். அவை அடுத்த தலைமுறைக்கான சொத்துக்களாகும்.
அரசியல் அதிகாரம் :
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பல மொழி பேசும் மாநிலங்கள் பல மதத்தை பின்பற்றும் மக்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற நாடு நம் நாடு. பாராளுமன்ற ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நம் நாட்டில் ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை உயிரோட்டமானதாகவும் உணர்வுள்ளதாகவும் அமைந்திட வேண்டும். அப்படிப்பட்ட தலைமை அமையப் பெற்ற சமூகங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.
நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகியும் தமிழக அளவிலும் இந்யித அளவிலும் முஸ்லிம் சமூகத்திற்கென்று ஒருங்கிணைந்த வலுவான அரசியல் தலைமை இல்லாமல் போனதுதான் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணம் நீதிபதி ராஜேந்தர் சச்சார் கமிஷன் அறிக்கை இந்த கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. இதற்கு மூல காரணம் முஸ்லிம் களிடையே அரசியல் அதிகாரம் குறித்த ஆர்வமும் விழிப்புணர்வும் இல்லாமல் போனதே. மேலும் அரசியல் ஹராம் என்ற நச்சுக் கருத்துக்கள் சுயநலத்தின் அடிப்படையில் மக்களிடையே திட்டமிட்டு பரப்பப்பட்டதுமே எனலாம். இப்பொழுது மக்கள் சற்று தெளிவு பெறுகின்ற நிலையில் உள்ளனர். மேலும் அனைத்து அவலங்களும் களையப்பட அரசியல் அதிகாரம் தான் தீர்வு என்ற கருத்தினை ஆணி அடித்தார் போல மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
இந்த நாட்டை ஆயிரம் வருடங்கள் ஆண்ட சமுதாயத்தின் கவனம் அரசியல் அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய சோகம் இந்த சமூக அவலம் இனியும் அரங்கேறக்கூடாது. இளைய சமுதாயத்தின் கவனம் அரசியல் அதிகாரத்தின் பக்கம் திருப்பப்பட வேண்டும் என்ற முஸ்லிம் சமுதாயத்தின் உண்மையான சமூக வளர்ச்சியின் ப்க்கம் மக்களை ஈர்க்கும் பணியில் சமூக நீதி அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றது.
ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!!

The above links are not working, kindly check and relink the pages,
Assalamu Alaikum,
Thanks for reply with us. We are progressing our site. Insha allah we will update all the details soon.
assalamu allikum
i am Abdul Aziz From Abu Dhabi i want buy your cd and book for new issues so how can bye from where in abudhabi .and india tamilnadu both
what age limit for IAS EXAM and my DOB: 01/07/1979
asalamu azhaikum. I really appreciating your job regarding education developmnets for our community sebsequently my opinion is u to find a way to learn our language of arabic. This will be very useful for us particullarly for the forthcoming generation.
assalamu alaikum….am aboo thahir from salem,studying BCA in jamal mohamed college,trichy,am looking to study in u.k. will you give me some guidance for this
CMN SALEEM DOING A GREAT SERVICE,WHICH IS MOST IMPT AT THIS TIME,
CMN SALEEM DOING THE MOST IMPORTANT SERVICE TO OUR SOCIETY, MAY ALLAH BE WITH HIM TO SPREAD HIS VEIWS………….
Peace and blessing of Almighty allah be with every one. I conguratulate brother CMN Saleem for his great move towards the muslim soceity’s development. May allah give him a long life and great success in his all endeavour.
pls send me some course which is suitable for ladies my sister want to study