சூரிய ஒளி மின்சாரம்

மின்சாரம் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. தன் ஆதி காலத்தில் கல்லில் ஒளி கண்ட மனிதன் எண்ணெய் மற்றும் நூல்களின் வழியாக வெளிச்சம் பெற்றான்.

நவீன அறிவியலின் வளர்ச்சியில் ஒன்றாக 1831ல், காப்பிடப்பட்ட தாமிரக்கம்பி சுருளின் இடையே காந்தத்தை முன்னும் பின்னும் நகர்த்தினால் மின்சக்தி உற்பத்தி ஆகும் என்பதை மைக்கேல் பாரடே கண்டுபிடித்து வெளியிட்டார். 1858ல் அருவிகளின் ஊடே டர்பைன்களை சுழலச் செய்து மின்சக்தி பெற முடியும் என்பதை அமெரிக்கா அறிமுகப்படுத்தி நீர் மின்சாரம் உருவானது.
பிறகு நிலக்கரியை எரித்து, நீரைக் கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைனை சுழல வைத்து அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
காலப்போக்கில் அணு சக்தியை பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து காற்றின் மூலமும் மிசாரம் தயாரிக்கப்பட்டது. இப்போது சூரிய ஒளி மின்சாரம்.
சோலார் பவர் சிலிகானை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட போட்டோ வோல்ட்டை செல்களின் மீது சூரிய ஒளி கதிர்கள் விழும்போது அது மின்சாரமாக மாற்றப்படுகிறது.

சர்வதேச அளவில் சூரிய மின் உற்பத்தியில் ஜெர்மனி முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனி 38.2 ஜிகாவாட், சீனா 28.2 ஜிகாவாட், இத்தாலி 18.5 ஜிகாவாட், அமெரிக்கா 18.2 ஜிகாவாட் அளவுக்கு சூரிய மின் உற்பத்தி செய்கிறது.
ஜெர்மனி தன்னுடைய மொத்த மின் உற்பத்தித் தேவையில் 50 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் சூரிய சக்தி மூலம் 3,002 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குஜராத் முதல் இடத்தில் இருக்கிறது.
2022-ம் ஆண்டு ஒரு லட்சம் மெகாவாட் (100 ஜிகாவாட்) சூரிய மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்ற சவாலான இலக்கினை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 6.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் ஆண்டுக்கு 15000 மெகா வாட் அளவுக்கு உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு 15,000 மெகாவாட் அளவுக்கு எந்த நாடும் மின் உற்பத்தியை உயர்த்தவில்லை.
17 சோலார் பூங்காங்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 12500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. உலக வெப்பமயமாதல் குறித்து நடந்த பாரீஸ் உச்சி மாநாட்டிற்கு பிறகு அனைத்து நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் (Renewable Energy Sources) தங்கள் கவனங்களை திருப்பி உள்ளது. இதனால் இந்த துறையில் முதலீடுகள் அதிகமாவதால் வேலை வாய்ப்புகளும் அதிகமாகி வருகின்றது.
இதுவரை உலகளவில் 81 லட்சம் பேர் இந்த துறையில் பணிபுரிகிறார்கள். மேலும் 2050-ஆம் ஆண்டில் 4.5 கோடியாக உயரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். இந்தியாவில் 2018-ஆம் ஆண்டில் சோலார் டெக்னாலஜி பிரிவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. சூரிய ஒளியை பெற்று சோலார் செல்வழியில் அதனை மின்கலத்தில் சேமித்துப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி மறைவுக்குப்பின் அது மின்சாரத்தை உமிழும் கலமாகவும்
மாற்றலாம். ஆக இதுபோன்ற தொழில் நுட்பங்களை மேலும் பன்மடங்கு ஆழமாக பி.இ பொறியியல் பயின்ற மாணவர்கள், இளைஞர்கள் முயன்றால் இதில் புதிய, எளிய வழிமுறைகளையும் கண்டறியலாம்.
குறிப்பாக பொறியியலில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் சுற்றுச்சூழல் பொறியியல், பவர் என்ஜினியரிங் முதலான தொடர்புள்ள துறைகளைப் பயின்றவர்கள். சூரிய ஒளி தொடர்பான மின் உற்பத்தியில் அதற்கான கருவிகளில் மாற்றம் கண்டுள்ள நவீன, எளிய கருவிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
ஏற்கனவே நம் நாட்டில் இதற்கான சாதனங்கள் தயாரிப்பும், உற்பத்தியும், விற்பனையும் நடந்துவருகிறது. இவைகளைக் கண்டு ஆய்ந்து மேலும் புதிய புதிய உத்திகளை பயன்படுத்தி அவைகள் சாமானியர்களும் வாங்கி வீட்டு உபயோகப் பொருட்களைப் போல் பயன்படுத்திட தயாரித்து வழங்க இளைஞர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இவைகளை தனியாக செய்வதைவிட பொறியியல் படித்த இளைஞர்கள் கூட்டு
முயற்சியாக இணைந்து மேற்கொண்டால் சிறந்தது.
சோலார் எனர்ஜி குறிப்புகளை National Institute of Solar Energy வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு : http://nise.res.in/
தமிழ்நாட்டில் TAMILNADU ADVANCE TECHNICAL TRAINING INSTITUTE இந்தப் படிப்பை வழங்குகிறது . http://solarenergyinstitute.in/
Address : No.42/25, GEE GEE Complex,IInd Floor,(Indian Bank Upstairs),Anna Salai, Chennai-600 002(Opp. Anna Salai HPO, Between Shanthi &Anna Theatre) Phone: 091 044 28527579/ 28414736. Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
SOLAR ENERGY DIPLOMA COURSE - தகுதி 8வது தேர்ச்சி போதுமானது.
கற்றுத் தரும் இடம் : NATIONAL OPEN SCHOOL - NEW DELHI, HYDERABAD, KOLKATA
மேலும் விபரங்களுக்கு : Website : www.bios.ac.in / www.mnes.bic.in / www.cwet.tn.nic.in