மருத்துவத் துறை

நம் எல்லோரையும் படைத்து பரிபாலித்து வரும் வல்ல நாயன் அல்லாஹ்வினாலும், அவனுடைய இறுதித் தூதரும், மனித குல வழிகாட்டியுமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் ஆண், பெண் இருபாலருக்கும் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கிய துறைகளில் ஒன்று மருத்துவத் துறை (Medicine sector).

மருத்துவத்தை மேம்ப்படுத்தி உலகிற்கு கற்றுக்கொடுத்த சமூகம் இஸ்லாமிய சமூகமே. கிபி.10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அல் - ஜஹ்ராவி, இமாம் இப்னு ஸீனா போன்றவர்கள் உலகின் மிகச்சிறந்த மருத்துவர்களாக விலங்கினார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு இஸ்லாமிய மருத்துவரால்தான் உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளத்திற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்க முடியும் என்பதற்கும் மேற்கண்ட அறிஞர்களே சான்று.
மருத்துவத்துறை, சேவை என்ற பட்டியலில் இருந்து, அப்பாவி மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் மாபெரும் வணிகம் என்ற அவல நிலைக்கு மிக வேகமாக மாறி வருகிறது. சாதாரண குடிமக்களுக்கு தரமான மருத்துவ சேவை என்பது எட்டாக்கனியாக மாறிவரும் இந்த அவல நிலையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இறைவனின் பிரதிநிதிகளாகிய நம் எல்லோருக்கும் உண்டு.
மருத்துவத் துறையில் நாம் எல்லோரும் அறிந்ததும், மிகப் பிரபல்யமானதுமாக உள்ள படிப்பு MBBS என்றழைக்கப்படும் அலோபதி மருத்துவப் படிப்பு. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 2652. தனியார் கல்லூரிகளில் 804. மொத்தம் உள்ள 3456 இடங்களில் சேர நீட் (NEET) தேர்வு கட்டாயம்.
சென்ற ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றாலும், இந்த ஆண்டும் நீட் தேர்வு கட்டாயமாகத் தொடர்கிறது. இதனால் நம் கிராமப்புற மாணவ / மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் மருத்துவம் படிக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கண் துடைப்பு நாடகமாக தமிழக அரசின் சார்பாக நீட் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டு விட்டன.
இந்தியாவைப் பொறுத்தவரை NEET தேர்வு போன்று பல முக்கிய மருத்துவ நுழைவுத்தேர்வுகள் உள்ளன.
அவை :
AIIMS – All India Institute of Medical Science,Delhi
AFMC – Armed Force Medical College, Pune
JIPMER - Jawaharlal Nehru Institute of Postgraduate Medical Education and Research, Pondycherry
Christian Medical College- CMC Vellore
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அலோபதி மருத்துவரே உண்மையான மருத்துவர் என்றும் இந்திய மருத்துவம் படித்தவர்கள் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் என்பது போன்ற ஒரு மனநிலை நம் அனைவருக்கும் இருந்தது நாம் அனைவரும் மறுக்க முடியாத விஷயம்.

ஆனால் அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் (Side effects), தேவையில்லாத அறுவை சிகிச்சைகள், மனிதர்கள் மீதான மருந்து நிறுவனங்களின் தாக்குதல்கள், தேவையே இல்லாத பரிசோதனைகள் போன்றவற்றின் காரணமாக தமிழக மக்களின் கவனம் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மருத்துவத்தின் திரும்பியுள்ளது.
இதனால் இந்திய மருத்துவம் படித்த மருத்துவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே நம் சமூக மாணவர்கள் இந்திய மருத்துவத்தின் பக்கம் கவனம் செலுத்துவது மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் மிகச் சிறந்ததாக அமையும்.
இன்ஷா அல்லாஹ், இந்திய மருத்துவத்தின் மூலம் மக்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் அதற்கும் NEET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மிக வேதனையான செய்தி என்னவெனில், சென்ற ஆண்டு வரை கால்நடை மருத்துவத்திற்காக அகில இந்திய அளவில் நடைபெற்று வந்த All India Pre-Veterinary Test கூட தற்போது நீட் தேர்வுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

INDIAN MEDICINE / இந்திய பாரம்பரிய மருத்துவம் சார்ந்த படிப்புகள்
இளங்கலை படிப்புகள்:
B.U.M.S. - Bachelor of Unani Medicine and Surgery
B.A.M.S. - Bachelor of Ayurvedic Medicine and Surgery.
B.H.M.S. - Bachelor of Homoeopathic Medicine and Surgery.
B.N.Y.S. - Bachelor of Naturopathy and Yogic Sciences.
B.S.M.S. - Bachelor of Siddha Medicine and Surgery.
முதுகலை படிப்புகள்:
M.D(UNANI) - National Institute of Unani Medicine (NIUM) Bangalore
M.D(SIDDHA) - National Institute of Siddha, Chennai
M.D(AYURVEDA) - National Institute Of Ayurvedic Medicine,Jaipur,Rajasthan
M.D(HOMOEOPATHY) -NATIONAL INSTITUTE OF HOMOEOPATHY, Kolkatta
M.D(Naturopathy) -National Institute of Naturopathy , Pune
M.S
M.Sc ANATOMY
M.Sc NEURO SCIENCE
M.Sc MEDICAL MICROBIOLOGY
M.Sc HUMAN GENETICS
M.Sc EPIDEMIOLOGY
M.Sc PHYSIOLOGY

இளங்கலை முடித்த மாணவர்களுக்கான அரசு மருத்துவத் துறை வேலை வாய்ப்புகள் :
MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) என்ற தேர்வின் மூலம்
Assistant Medical Officer
Central Govt Hospital
Govt Medical Institutions
District Govt Hospitals
Govt/Private Drug Manufacturing Units
Central/State Drug Control Sector
Pharmaceutical Companies
Primary Health Centre
National Rural Health Mission
முதுகலை முடித்த மாணவர்களுக்கான அரசு மருத்துவத் துறை வேலை வாய்ப்புகள்:
TEACHING FACULTY in GOVT/PRIVATE MEDICAL COLLEGES
Govt Hospitals
RESEARCH –MINISTRY OF AYUSH
CCRUM (Central Council For Research In Unani Medicine)
CCRSM (Central Council For Research In Siddha Medicine)
CCRAM (Central Council For Research In Ayurveda Medicine)
Central / State Research Centers
Junior Research Fellowship
Assistant Research Officer
Research Officer
Assistant / Deputy Director / Director
நல்ல மருத்துவர்களை மனிதப் புனிதர்களாக எண்ணி கவுரவிக்கும் நமது தமிழ்ச் சமூகத்திற்கு மருத்துவ சேவை செய்ய நம் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டி வழிகாட்டுவோம்…
இன்ஷா அல்லாஹ்…. அவர்கள் இஸ்லாத்தை தமிழ்ச் சமூகத்திற்கு செயல் வடிவில் அறிமுகம் செய்பவர்களாக உருவெடுக்கட்டும்…
வழிகாட்டுதல் தொடரும்…
மு.முஹம்மது இஸ்மாயில் M.E., M.A (edu) உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்