வாருங்கள்... சரிவுகளிலிருந்து மீண்டெழுவோம்...! 2

தவறு 5
கோர்ஸை தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம்:

Students  their parents are seen seeking help from admission counsellors at LPU
+2 முடித்த உடன் என்ன கோர்ஸ் எடுக்க வேண்டும் என்ற குழப்பமும் தடுமாற்றமும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்படும். நமக்குத் தெரிந்த, பழகிய, அண்டை வீட்டு மாணவர்கள் படிப்பை நிறைவு செய்த பின் அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் பெரும்பாலும் நாம் கோர்ஸை தேந்தெடுக்கிறோமே தவிர, அந்த கோர்ஸினுடைய தரத்தையும், அதன் நிலையையும் புரிந்து தேர்ந்தெடுப்பதில்லை எனும் கசப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நமக்குத் தெரிந்த ஒருவரின் படிப்பை (அ) ஊதிய நிர்ணயித்தை வைத்து எனது மகனும் அப்படி ஆக வேண்டும் என்று அதே கோர்ஸை தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் நியாயம்? எனது நண்பன் இந்த கோர்ஸை தேர்ந்தெடுக்கிறான் என்பதற்காக நானும் இந்த கோர்ஸை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் மனநிலையும் கவனிக்கத்தக்கது.
விளைவுகள்:-
ஒருவரை பின்பற்றி எடுக்கப்படுகின்ற கோர்ஸ்களில், அவர்கள் அந்த கோர்ஸை சாதகமாக பயன்படுத்தி உயர்ந்திருப்பார்கள். எல்லோரும் சாதகமாக பயன்படுத்துவார்கள் என்று உறுதியிட்டுக் கூற முடியாது. அந்த குறிப்பிட்ட கோர்ஸை மற்றொருவர் பாதமாக பயன்படுத்தி வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும் போது அந்த கோர்ஸ் சரியில்லை என்று கோர்ஸ் மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டு நாம் நியாயவான்களாக மாறி விடுகின்றோம். ஒரு கோர்ஸ் பற்றி தெளிவான சிந்தனையில்லாமல் தேர்ந்தெடுக்கும் போது அவனது எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடுகிறது.
விளைவு 2:-
சில கோர்ஸ் களை விரும்பி எடுத்துப் படிக்கின்ற மாணவர்களிடம், நீங்கள் எதற்கு இந்த கோர்ஸை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டாலும் சரி, உங்கள் குழந்தைகளை எதற்கு இந்த கோர்ஸை எடுத்து படிக்கச் சொன்னீர்கள் என்று மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டாலும் சரி “நான் இதற்காகத்தான் படிக்கிறேன் / நான் இதற்காகத்தான் எனது குழந்தைகளை படிக்க வைக்கிறேன்” என்று மன தைரியத்தோடு சொல்லும் மாணவர்கள் / பெற்றோர்களை விட “கேட்ட கேள்விக்கு மழுப்பி விட்டு தெரியவில்லை” என்று பதில் சொல்பவர்கள் தான் அதிகம்.
ஏன்? எதற்காக படிக்கிறோம் என்பதே தெரியாமல், விளங்காமல் மூன்று வருடம் இளங்கலை (UG) முடித்த பின், அதற்கு பின் என்ன செய்யப் போகிறோம் என்பதை தீர்மானிக்க, முடிவெடுக்க முடியாத காரணத்தால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.
என்ன செய்ய வேண்டும் ?
ஒவ்வொரு மனிதர்களுக்கும் சில தகுதிகளையும் குணங்களையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். ஒரு மாணவனுக்கு தகுதியும் ஆர்வமும் வாய்ப்பும் அதிகம் இருப்பதால் அவருக்குத் தகுந்த கோர்ஸை தேர்ந்தெடுப்பார். மற்றொரு மாணவனுக்கு ஆசையும் ஆர்வமும் குறைந்து அவனும் அதே கோர்ஸை தேர்ந்தெடுப்பதால் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது. எனவே மற்றவர்களை வைத்து ஒப்பிட்டு ஒரு கோர்ஸை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
நண்பர்கள் என்பது வேறு ; கோர்ஸை தேர்ந்தெடுப்பது வேறு. +2 முடித்து எடுக்கின்ற கோர்ஸ் ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற விசயம் என்பதை யோசித்து முடிவெடுங்கள்.
தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பாலான கல்லூரிகளில் போதிக்கப்படும் சில கோர்ஸ்கள் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம். இதைத் தவிர இன்னும் பல படிப்புகளும் இருக்கின்றன.
DEGREE
B.A. Arts B.Com B.sc (Science)
Tamil Commerce Maths
English Physics
Arabic chemistry
Economics zoology
History Bio-technology
Sociology Botany, Computer Science, B.C.A.
Engineering Medical
Civil Engineering M.B.B.S.
Mechal ’’ B.D.S.
Electrical & Electronic Anatomy, Physialogy
இதைத் தவிர ஒவ்வொரு துறைகளிலும் ஏராளமான படிப்புகளும், அதன் கிளைகளும் இருக்கின்றன.
தவறு 6
(அரசு) வேலை வாய்ப்புகளில் அலட்சியம்:
வெளிநாட்டு வேலை மோகம், உடனே அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை, (கடின) உழைப்பிற்கு தயாராக மறுக்கும் இளைஞர்களின் குணம்... போன்ற காரணிகளை நம்முள் வைத்துக் கொண்டு ‘(அரசு) வேலை கிடைக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டை வைக்கின்றோம்.
தான் செய்கின்ற குற்றங்களை, தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், முன் வராமல் அந்தப் பழியை இன்னொருவர் மீது சாட்டுவது பெரும்பாலான மனிதர்களின் இயல்பான குணம். சாலையில் சென்று கொண்டிருக்கின்ற போது காலில் ‘முள்’ குத்தி விடும். ஆ... ஆ... முள் குத்திடுச்சே...ன்னு சொல்லுவோம். உண்மையில் பார்த்தால், முள் நம்மை குத்தவில்லை; நாம்தான் தெரியாமல் முள் மீது கால் வைத்து விட்டு கத்துவோம். தெரியாம நான் முள் மீது கால் வைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் முள் குத்திடுச்சுன்னு சொல்றோம். நமது அறியாமையால் செய்த தவறுகளுக்கு ‘முள்’ எப்படி காரணமாகும்? அது போல, நம்மிடம் முயற்சி இல்லாமல், அதன் மீது ஆர்வம் இல்லாமல், “வேலை கிடைக்கல” என்று சொன்னால “வேலை வாய்ப்பு” எப்படி காரணமாகும்..?
இளங்கலை (UG) முழுமையாக முடித்து விட்டு முது நிலை (PG) படிப்பைத் தொடரும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயர் படிப்புகளில் மிக மிகக் குறைவு. +2 அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு வெளிநாடு அல்லது ஏதேனும் தொழிலுக்குச் சென்று விடுகிறார்கள்.
விளைவுகள் :-
அரசு சார்ந்த துறைகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை தெரியாத காரணத்தால் அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் பங்கு மிகவும் குறைவு. நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக குழந்தைகளின் கைகளில் அதிகப் பணமும், செல்போனும், இரு சக்கர வாகனம்... போன்ற ஆடம்பர வாழ்கையை ஏற்படுத்தித் தருவதால் மாணவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று யோசிக்கத் தெரியாமல், யோசிக்க முடியாமல், ‘தனக்குக் கிடைத்ததையே நல்லது’ என்று நினைத்துக் கொண்டு அரசு சார்ந்த துறைகளையும் உயர்ந்த பதவிகளையும் தொலை நோக்கு சிந்தனைகளையும் இழந்து தவிக்கின்றனர். பணம் மற்றும் அது சார்ந்த விசயங்கள்தான் ‘வாழ்க்கை’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால் “ஒழுக்கம், நீதி, நேர்மை, மரியாதை, கலாச்சாரம், பண்பாடு...” என அனைத்திலும் வீழ்ந்து போய் நிற்கிறோம்.
தமிழகத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லூரிகளும் ஏராளமான பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் வெள்ளி விழா, பவள விழா, நூற்றாண்டு விழா கல்வி நிறுவனங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு ஆண்டில் ஒரு கல்லூரியில் இருந்து சுமார் (குறைந்த பட்சம்) ஆயிரம் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியேறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், ஒரு ஆண்டில் 10 கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்த பட்சம் 10,000 மாணவர்களாவது படிப்பை நிறைவு செய்து விட்டு வெளியேறுகிறார்கள்.
சுமார் 50 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் படிப்பை நிறைவு செய்து விட்டு வெளியேறி இருப்பார்கள். இவர்களில் எத்தனை பேர் IAS, IPS… போன்ற உயர் அரசுப் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்? படித்து முடித்த மாணவர்கள் சென்ன செய்கிறார்கள்? மாணவர்களை சமூக சிந்தனையோடு உருவாக்க வேண்டிய முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் இன்றைய நிலை…
இப்படி ஏராளமான கேள்விகள் இருந்தாலும் அதற்கு எதிர்மறையான (Negative) பதில்தான் நம்மால் கொடுக்க முடியும்.
இது சுமார் 10 கல்வி நிறுவங்கள் தான் இதைத் தாண்டி மருத்துவம் (MBBS), இஞ்னியரிங் (BE), MBA, MCA… போன்ற துறைகள், அதில் கிளைகள்… இதில் எல்லாம் படிக்கின்ற முஸ்லிம் மாணவர்களின் தரமும், தகுதியும், வேலை வாய்ப்பும் யோசிக்க முன் வந்தால் தலை சுற்றி விடும்.
நம்மிடம் இவ்வளவு குறைகளை வைத்துக் கொண்டு அரசு வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகமாக இருக்கின்ற நாம் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆனால் நம்மை விட சிறுபான்மைச் சமூகமாக இருக்கின்றவர்களுக்கு எத்தனை இட ஒதுக்கீடு போராட்ட, ஆர்ப்பாட்ட களங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?
ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அனைத்து உயர் பதவிகளிலும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். காரணம் “சிறு வயதில் இருந்தே நீ இப்படித்தான் உருவாக வேண்டும், வளர, உயர வேண்டும் என்ற அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களின் உந்துதலும், சரியான வழிகாட்டுதலும் உயர் பதவிகளில் அமரச் செய்து விடுகின்றன!” உண்மையில் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.
மூல காரணத்தை நாம் தொலைத்து விட்டு எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது...?
என்ன செய்ய வேண்டும்?
என்னென்ன கோர்ஸ்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டது போல, அந்த கோர்ஸ்களை படிப்பதால் என்னென்ன அரசு வேலை – வாய்ப்புகள் இருக்கிறது என்பதனையும் உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
இளங்கலை (UNDER GRADUATE) B.A / B.Sc/ B.Com (3 ஆண்டுகள்)
தற்போதைய கல்வி, தொழில் நுட்பம், அறிவியல் வளர்ந்த காலத்தில் வெறும் UG மட்டும் படித்திருந்தால் போதாது. போட்டியாளர்கள் அதிகமாக அதிகமாக அரசு/ தனியார் வேலைகளுக்கு நிர்ணயிக்கப்படும் தகுதிகளும் உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இருந்த போதிலும் UG முடித்திருந்தாலும் சில (அரசு) வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன.