saleem

saleem

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018
Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

நீருக்குள் அடங்கிப் போகாமல் மேல் எழும்பும் நீர்க் குமிழிகள் போல சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில கேள்விகள் மேலெழுந்து வந்து கொண்டே இருக்கும்.
எதற்காக வாழ்கிறேன், யாருக்காக வாழ்கிறேன், என்னை உருவாக்கியன் யார், எதற்காக உருவாக்கினான், அவன் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதில்களின் ஆழம் தெரியாமல் மனிதர்கள் தடுமாறிக் கொண்டே இருப்பார்கள்.
இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் தேடல்களின் ஊடாக “இறைவன், பிரபஞ்சம், உலகம், மனிதன், வாழ்வு, மரணம், வழிபாடுகள்’’ என மனிதனின் தேடலில் உள்ள அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளான் இறைவன். உலகப் பொதுமறை குர்ஆனில் உள்ள இப்றாஹீம் நபியின் வரலாற்றுச் செய்திகளை தொகுத்துப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வாழ்க்கை குறித்த தெளிவைப் பெறுவது நிச்சயம்.
மனித வாழ்வின் அளவுகோல்கள், மதிப்பீடுகள், கணிப்பீடுகள் என எங்கும் எதிலும் எப்பொழுதும் இறைவன் முதன்மைப்படுத்தப் படுகின்றவனாக இருக்க வேண்டும். இதுவே வாழ்க்கை நெறி என்பதை மனித சமூகத்துக்கு வாழ்ந்து காட்டினார் இப்றாஹீம் நபி.
இப்றாஹீம் நபி சொல்வார் “எனது வாழ்வும் மரணமும், வணக்கமும் வழிபாடுகளும் அகிலங்களின் இரட்சகனான இறைவனுக்கு உரியனவாகும்.” திருமணம், குடும்ப வாழ்வு உள்ளிட்ட வாழ்வின் அத்தனை செயல்பாடுகளும் இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்ராஹீம் நபியின் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளும் சோகங்களும், வெற்றிகளும், ஏற்றங்களும் கடந்து போக வேண்டிய அடுத்த கட்ட நகர்வுகளே. அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து செல்பவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கு இப்றாஹீம் நபி அவர்களது வாழ்க்கை ஒரு கண்ணாடி.அவர் மட்டுமல்ல இறைக்கட்டளைக்கு இணங்கிப் போகும் மனைவி, இறைச் சோதனையை இன்பமுடன் ஏற்ற மகன் என அவரைச் சுற்றி இருந்தவர்களும் மனித சமூகத்திற்கு பாடமாகிப் போனார்கள். இறைவனும் அவர்களது நடைமுறைகளை அங்கீகரித்து அதற்கு “இப்றாஹீம் நபியின் மார்க்கம்” என்று சான்று வழங்கினான்.
இப்றாஹீம் நபி அவர்கள் முன் மொழிந்த மார்க்கம் தான் முஹம்மது நபி அவர்களால் இஸ்லாம் என்ற பெயரில் சத்தியமார்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்றாஹீம் நபியின் வாழ்க்கை சொல்லும் அடிப்படை ஒன்றுதான்
உலகத்து இரட்சகனை ஆய்ந்தறிந்து கொள்!வாழும் காலம் முழுவதும் அவனுக்காக துணிந்து நில்! தேடலின் ஊடாக, சிந்தனை வழியாக இறைவனை அறிவோம்! அவனுக்கானதே வாழ்க்கை என்பதை உணர்ந்து எதையும் கடந்து செல்வோம்!நமது இலக்கு இறைவனை இன்முகத்துடன் சந்திப்பதே!

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

ஒருவர் யாராக இருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் கும்பலுடன் சேர்ந்ததும் அவர் தன்னுடைய அறிவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, கும்பலின் அறிவுக்குக் கட்டுப்பட்டவராகிவிடுகிறார் என்கிறார் குஸ்தாவ். அந்தக் கும்பலில் பல தலைகள் இருந்தாலும் ஒன்றுக்கும்கூட அப்போது மூளையிருக்காது! நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மக்களிடம் இருந்த அதே கொலைவெறி மனப்பான்மை இப்போதும் தொடருவது துரதிருஷ்டவசமானது. வதந்திகள் பரவத் தொடங்கும்போதே அது உண்மையல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், கும்பல்கள், சந்தேகப்படுகிறவர்களை அடிக்கத் தொடங்கிவிடும். வதந்திகள் உலவத் தொடங்கிய உடனேயே சமூக ஊடகங்களில் அதை மறுத்துத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால், பாஜகவினரோ அப்பாவிகளை அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இதைப் பார்க்கும் போது, ஒரு முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பு.

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

‘’டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் பெட்கோக் பயன்படுத்த அனுமதி கொடுப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறீர்கள். எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தாமல், பெட்கோக் பயன்படுத்துவதால், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஆராயாமல் எப்படி அனுமதி அளித்தீர்கள். ஆனால், காற்று மாசால், 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? காற்று மாசால், இத்தனை மக்களா உயிரிழப்பது?
நாளேடுகளில் வந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் அளித்த அறிக்கையிலும் காற்று மாசால் மக்கள் உயிரிழப்பைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளீர்கள்’’ ‘’எங்களுக்குத் தொழிற்சாலைகள் முக்கியமல்ல, மக்களின் நலன்தான் முக்கியம். இதைத் தெளிவாக உங்களிடம் தெரிவிக்கிறோம்.’’

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

‘’அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. எட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். காரைப் பற்றி கவலைப்படுபவர்கள் நீரையும் சோறையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது. எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா? எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது.

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

அலிகர் பல்கலைக் கழகத்தில் மாணவர் விடுதியில் மாட்டப்பட்டிருந்த ஜின்னாவின் புகைப்படம் இந்திய விடுதலை வரலாற்றோடும், அவற்றின் நினைவுகளோடும் நெருக்கமுடையது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களுக்கு ஜின்னாவின் படத்தை காரணமாக சொல்வது ஒரு சாக்கு போக்கு தான்.

ஜின்னாவின் படம் அங்கே அதே இடத்தில் 1938 முதல் இருந்து வருகிறது. இங்கே அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஒரு செய்தி கூறுகிறார்கள் அது “நீங்கள் சிறுபான்மையர், உங்கள் வரலாறும் அவற்றின் நினைவுகளும் இந்திய நாட்டின் ஒரு பாகம் என்று ஆகாது.” ஜின்னா எந்த இந்து பெரும்பான்மை வாதம் குறித்து பயந்தாரோ அசலாக அதே மிரட்டல்தான் இது. காவல்துறை கூட தாக்குதல் நடத்திய குண்டர்களை விட்டு விட்டு மாணவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டது. காவலர்கள் உணர்ச்சிக்கும் சட்டத்துக்கும் இடையில் ஊசலாடினார்கள். இந்திய தேசத்தின் அதிகார நிறுவனங்கள் மதவாத மாக மாறிக்கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது.இதையும் தாண்டி அலிகர் பல்கலை கழகம் சிறுபான்மை தகுதியை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள பாஜக அரசு அலிகருக்கு சிறுபான்மை தகுதியை மறுக்கிறது. சிறப்பான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை கொண்டு “சிறுபான்மை” என்ற கருத்தை நியாயமான ஜனநாயக அரசியல், அரசியல் சட்டத்தின் மூலம் உறுதி செய்யும் என்பதால் ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு சிறுபான்மை என்கிற கருத்து எப்போதும் அசௌகர்யமாக இருக்கும். அதனால் சிறுபான்மை என்று வருகிறபோது அரசியல் பொறுப்பு உண்டு என்பதால் அவர்களை முஸ்லிம் என்றும் கிறிஸ்டியன் என்றும் மதத்தின் பெயரைக் கூறி அச்சுறுத்துவது பெரும்பான்மைவாத அரசுக்கு சுலபமாக இருக்கிறது.இது, ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படைகளை மாற்றி விடுகிறது. இவை அனைத்தைப் பற்றியும் ஜின்னா எச்சரிக்கையாக இருந்தார். 

இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு முடிவுற்ற போது அதில் ஜின்னா மட்டும் தான் வெற்றியும் மரியாதையும் பெற்றார் என்கிறார் ஜிலீஹ் பிணீஸீபீ, நிக்ஷீமீணீt கிஸீணீக்ஷீநீலீ! நூலின் ஆசிரியர் சி. சௌத்ரி. “ஜின்னா விரும்பிய எதையும் ரகசியமாக வைக்கவில்லை. அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள வில்லை. பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரசுக்கும் தோல்வியை கொடுத்தார். பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இந்து அரசியல்வாதிகளும் இரு தரப்பிலுமுள்ள எழுத்தாளர்களும் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் துரத்தியடித்ததன் மூலம் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தார். அவரால் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறிய சமயம் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் அனைத்துக்கும் ஜின்னாவின் அர்த்தமில்லாதகடுமை தான் காரணம் என்று அவர்கள் ஜின்னா மீது பழிசுமத்தினார்கள். ஆனால், அவர்கள் ஜின்னாவின் கடுந்தன்மை (ணிஜ்tக்ஷீமீனீவீsனீ) என்று கூறுவது முஸ்லிம்களுக்காக அவர் முன் வைத்த குறைந்தபட்ச கோரிக்கைகள் தான். இது மட்டும் தான் அவரது நீண்டகால கோரிக்கை என்றுபலருக்கும் தெரியும். முஸ்லிம்களின் தலைவர்முஸ்லிம்களுக்காக பேசக் கூடாது என்று ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார்? அவரது கோரிக்கைகள் அர்த்தம் இல்லாதது என்றால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏன் அவரது கோரிக்கைக ளோடு ஒத்துப்போனார்கள்?’’ என்கிறார் சௌத்திரி. சௌத்திரியை பொருத்தமட்டில், ஜின்னாவின் கோரிக்கைகள் நியாயமானது. இது குறைந்தபட்ச கோரிக்கை தான். ஒரு சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் இதனை கேட்க முடியும். எதிர்காலத்தில் சிறுபான்மையாகப் போகும் ஒரு சமுதாயத்தின் தலைவராக அந்த சமூகத்தின் உரிமைகளுக்காக எழுந்து நிற்க ஜின்னாவுக்கு உரிமை உண்டு. ஜின்னா தனது அரசியலில் தெளிவாக இருந்தார். மற்றவர்கள தெளிவாக இருக்கவில்லை. அதனால், அவர்கள் அரசியல் போராட்டத்தில் ஜின்னாவிடம் தோல்வி அடைந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பிரிவினையை தவிர்க்கலாம் என்று பிரிட்டிஷ் தூதுக்குழு (சிணீதீவீஸீமீt விவீssவீஷீஸீ) முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் நிராகரித்தது. தேசப்பிரிவினை போன்ற பேரழிவுகளை கண்ட பின்னர் ஒப்புக்கொண்டது. அரசியலில் காங்கிரஸ் பக்கம் நிலையான கொள்கை இல்லை என்பதை உணரமுடிகிறது. ஜின்னாவின் கோரிக்கை என்பது அரசியலில் சமநிலை இருக்க இந்துக்களுடன் முஸ்லிம் களும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாக மட்டும் இருந்திருக்க கூடும். தூது குழுவின் திட்டத்தை காங்கிரஸ் நிராகரிக்கவே ஜின்னா தனது கோரிக்கைகளை அடைய மத அரசியல் என்ற எல்லைக்குப் போனார். சமரசமே இல்லாத படிக்கு பாகிஸ்தான் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்தார்.  ஜின்னா காங்கிரஸ் மற்றும் இந்துக்களிடத்தில் மென்மை காட்டுகிறார் என்று 1930 களில் பிற முஸ்லிம் தலைவர்கள் சந்தேகப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலில் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என்பதை ஜின்னா படிப்படியாக தான் ஒப்புக்கொண்டார். 1940ல் லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா தலைமை ஏற்று பேசியபோது, “முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை.

எப்படி விளக்கிச் சொன்னாலும் முஸ்லிம்கள் ஒரு நாட்டின் குடி மக்கள்" என்றார். இதனை தர்க்க ரீதியில் நியாயப்படுத்தவும் முயற்சித்தார். சிறுபான்மைக்கு ஒரு நாடு பெரும்பான்மைக்கு ஒரு நாடு என்று ஒரு அரசின் கீழ் இரண்டு நாட்டை வைத்து பராமரிப்பதில் அசௌகர்யம் (ஞிவீsநீஷீஸீtமீஸீt) உண்டாகும் என்றார். இரண்டு நாடாகத்தான் பிரிந்து இருக்க வேண்டும் என்ற நெருக்கடி உண்டான போது ஜின்னா அசௌகர்யமான ஒரு அரசின் கீழ் இருப்பதற்குப் பதில் தனியான ஒரு நாடாக பிரிந்துவிட முடிவு செய்து விட்டார்.

Write on வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018

மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, இருப்பிடம். எத்தனைதான் நாம் தூரமாக பிரிந்திருந்தாலும், கண்ணுக்குப் புலப்படாத சங்கிலி ஒன்று நம்மையும் வீட்டையும் பிணைத்துள்ளது. மாலை நேரத்து போக்குவரத்து நெரிசல்களின் போது மனித முகங்களைப் பாருங்கள். வீட்டை அடைய வேண்டும் என்ற வேகம் தெரியும். 

இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் இப்படி குறிப்பிடுகின்றான் : “அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (அல்குர்ஆன் 16:80) அந்த வகையில் ஓர் இஸ்லாமிய வீடு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இதோ பத்து அடையாளங்கள்.
· வீடு என்பது படுக்கையறை, சமையலறை, கழிவறை போன்றவைகளைக் கொண்ட வெறும் கட்டிடமல்ல. மாறாக நம் வீட்டுக் கும் உயிர் உண்டு. அன்பான பெற்றோர், பாசமுள்ள குழந்தைகள், நேசம் நிறைந்த சகோதர சகோதரிகள் என கூடி வாழ்வதுதான் வீடு. அந்த வகையில் வீட்டை அன்பைச் சமைக்கிற ஒரு கூடு என்று கூறலாம். எனவே ஒரு இஸ்லாமிய வீட்டில் எப்போதும் அன்பும் பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
· பொதுவாக இன்றைய இஸ்லாமிய வீடுகள் சினிமா தியேட்டராகவும், நாடக மேடை யாகவும், பேன்ஸி -குட்ஸ் நிரம்பிய ஷாப்பிங் மால்களாகவும், ரெஸ்ட் ஹவுஸ்களாக மட்டுமே அமைந்துள்ளன. ஆனால் அதை யெல்லாம் தாண்டி நம் வீடுகள் அவ்வப்போது மஸ்ஜிதுகளாகவும், நூலகங்களாகவும் செயல் பட வேண்டும். “உங்கள் இல்லங்களை (தொழப்படாத - குர்ஆன் வாசிக்கபடாத) மண்ணறை களாக” மாற்றிவிடாதீர்கள் என்பது நபிமொழி. எனவே ஒவ்வொரு இல்லத்திலும் தொழும் அறை. (அல்லது தொழுவதற்கென்று ஒரு தனி இடம்.) ஆபாசக் கலப்பில்லாத நல்ல நூல்கள் நிரம்பிய ஒரு நூலக அறை (குறைந்தபட்சம் ஒரு புக்ஸ் செல்ஃப்) இடம்பெற வேண்டும்.
· இல்லத்தை அலங்கரிக்கிறோம் என்ற பெயரில் உருவப்படங்களை சுவர்களில் மாட்டிவைக்கக் கூடாது. கலையார்வம் என்ற பெயரில் ஆபாசமான நிர்வாணமான பொம்மை, சிற்பங்களை ஆங்காங்கே பரப்பி வைக்கக் கூடாது. உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் ரஹ்மத்துடைய மலக்குகள் வருகை புரிய மாட்டார்கள் என்பது நபிமொழி. உயிரற்ற மரம் செடி கொடி, பூக்கள் போன்ற இயற்கை சீனரி படங்களை சுவர்களில் மாட்டி வைக்க அனுமதியுண்டு. தலைவாசல், கண்ணாடி, டைனிங் டேபிள், கழிவறை போன்ற இடங்களில் அதற்கென்று உள்ள துஆக்களை ஸ்டிக்கர்களாக வாங்கி ஒட்டி வைத்தால், நாமும் நம் குழந்தைகளும் அதை மனனமிட்டுக் கொள்ளலாம்.
· அவரவர் வசதி, தகுதி, தேவைக்கேற்ப வீடு பெரிதாகவோ, சிறிதாகவோ அமையலாம். ஆனால் ஆடம்பரம், பகட்டு, வீண் விரயம் கூடவே கூடாது. வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் விரும்ப மாட்டான். ஆணுக்கு ஒரு படுக்கை, அவர் மனைவிக்கு ஒரு படுக்கை, விருந்தினருக்கு ஒரு படுக்கை, இவற்றை தவிர்த்து நான்காவது ஷைத்தானுக்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இனிய அணுகுமுறை, நற்பண்புகள், மக்கள் சேவை இவைதான் ஒரு மனிதனுக்கு மதிப்பைப் பெற்றுத் தரும். வெறும் கல்மரம், சிமெண்ட், பெயிண்ட் போன்ற பொருட்களால் ஒரு போதும் நாம் இறைவனிடம் மதிப்பைப் பெற முடியாது.
· பொதுவாக வீடுகளில் ஆண்களுக்கென்று சில இயற்கையான பணிகள் உண்டு. பெண்களுக்கு அது போல சில பணிகள் உண்டு. அவரவர் தங்கள் பணிகளை முறையாகச் செய்வதோடு, பார்ட்னருடைய பணிகளில் பரஸ்பரம் உதவி செய்து பகிர்ந்து கொண்டால் அந்த இல்லம் இனிமையானதாக அமையும். குறிப்பாக சமையலறை என்பது பெண்களுக்கான பகுதி
அல்ல. ஆண்களும் உள்ளே நுழைந்து சமைக்கலாம். சமைக்க உதவலாம். நபி (ஸல்) அவர்களே இதற்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.· தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள ஒருகாலத்தில் நாம் வாழ்கிறோம். எனவே வெளியிலிருந்து ஒரு ஃபோன் வந்தால் காலிங்பெல் அழுத்தப்பட்டால் வீட்டிலுள்ள பெண்கள் எடுத்த எடுப்பிலேயே கதவைத் திறந்து அந்நிய ஆண்கள் உள்ளே நுழைய அனுமதித்துவிடக் கூடாது. குழைந்து பேசக் கூடாது வந்த விபரம் கேட்டு நிதானமாக தெளிவாக பதில் பேசி அனுப்பி விட வேண்டும்.
· பொதுவாக அந்நிய வீடுகளில் ஸலாம் கூறி அனுமதி பெற்ற பின்பே நுழைய வேண்டும். வீட்டில் உள்ள பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் பருவவயது அடையாத சிறுவர்களும் கூட வைகறை தொழுகைக்கு முன், ஆடைகளைத் தளர்த்தி ஓய்வெடுக்கும் மதியவேளை, இஷா தொழுகைக்குப் பின் இந்த மூன்று வேளைகளிலும் அனுமதி பெற்றே நுழைய வேண்டும். (அல்குர்ஆன் 24:61, 24:58) வீட்டில் உள்ள ஓர் அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்வதாக இருந்தாலும் அனுமதி அவசியம். காணக்கூடாத காட்சியை கண்டுவிடாதிருக்கு தாய் இருக்கும் அறையில் நுழைந்தாலும் அனுமதி அவசியம்.
· குடியிருக்க ஒரு வீட்டை அமைக்கும் போதுசுற்றுச் சூழல் மாசுபடாத விதத்திலும் அண்டை வீட்டுக்குத் தொல்லை தராத அடிப்
படையிலும் அமைய வேண்டும். “உனது அண்டை வீட்டுக்கு காற்று செல்லாத வகையில் உனது வீட்டை உயரமாகக் கட்டாதே’’ என்பதே நபிமொழி. சுத்தம் ஈமானில் ஒருபாதி என்றும் கூட நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே படுக்கையறை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. சமையல் அறை குறிப்பாக கழிவறையும் சுத்தமாக இருக்க வேண்டும்.
· ஏழு வயதைத் தாண்டிய ஆண் பெண் குழந்தைகளை படுக்கைகளில் பிரித்துவிடவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப் பிட்டுள்ளார்கள். எனவே, வசதியுள்ளவர்கள் ஆண் - பெண் குழந்தைகளுக்கு தனித்தனிபடுக்கை அறைகளையும். வசதியில்லாதவர் கள் இருபாலரையும் பிரிக்கும் தனித்தடுப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு வீட்டில் உள்ள ஆண் - பெண் குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால் வெளியில் இந்த ஒழுக்கம் பன்மடங்கு பேணப்பட வேண்டும்.
· ஒவ்வொரு மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை ஏக இறைவனாகிய அல்லாஹ்வே நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இதுதான் எனஇறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதாலோ, ஜன்னலை மாற்றுவதாலோ அவனுக்கு என்று உள்ள விதியில் எந்த மாற்றமும் ஏற்படாது. வாஸ்து சாஸ்திர என்பது இஸ்லாத்தில் இல்லை. காற்றோட்டம், சுகாதாரம், வசதி இவைதான் முக்கியமே தவிர வாஸ்து முக்கியமல்ல. முடிவாக இரு செய்திகள் எந்த வீட்டில் அனாதை இருந்து அந்த அனாதையுடன் இனிய முறையில் நடந்து கொள்ளப்படுகிறதோ அந்த வீடுதான் இஸ்லாமிய வீடுகளில் சிறந்த வீடு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, நமது இல்லங்கள் நமக்கான ரெஸ்ட் ஹவுஸாக மட்டுமல்லாமல் அனாதைகளின் சரணாலயங்களாகவும் இருந்தால் சிறப்பு. இது முதல் செய்தி. நாம் பெரிய வீடுகளிலும் வசிக்கலாம் அல்லது சிறிய பிளாட்டிலும் வசிக்கலாம். எங்கே நாம் வசித்தாலும் அங்கே நிச்சயம் நம்மை மரணம் தேடி வரும். அந்த மரணத்தோடு நாம் வீடு மாற வேண்டியது வரும். “அந்த நிலையான சுவனங்களில் தூய்மையான இல்லங்கள் அவர்களுக்கு இருக்கின்றது” என்று இறைவன் கூறுகின்றான். (09:72) அந்த சுவன வீட்டை அடையப் பெற இங்கே நிறைய நல்லமல்கள் புரிவோம். இது இரண்டாவது செய்தி.