அன்னை கதீஜா கல்லூரியில் “மண்ணும் மரபும்” தமிழர் வாழ்வியல் பண்பாட்டு நிகழ்ச்சி

22.1.2018 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் “மண்ணும் மரபும்” என்ற தலைப்பில் தமிழர் வாழ்வியல் பண்பாட்டை விளக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.

akasc 1

இதில் ஏ.வி.சி கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் அவர்களும், கோவை அவினாசி லிங்கம் ? முன்னாள் இணைப் பேராசிரியை முனைவர் கலைவாணி தமிழ்வேலு அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பண்டைய தமிழர் வாழ்வியல் கண்காட்சி ஒன்றை நடத்தினார்கள். அதில் பழங்கால வீடுகள், அளவு நிறுவைகள், அணிகலன்கள், நீர் நிலைகள், உணவு வகைகள், நெல் வகைகள், மலர்கள், உழவுக்கு பயன்படும் கருவிகள் ஆகிய தலைப்புகளில் செய்திகளை, பொருட்களை காட்சிப்படுத்தினர்

akasc 2
மேலும் நாட்டுப்புறப் பாடல், விழிப்புணர்வுப் பாடல் போன்ற தலைப்புகளில் பாடல்கள் பாடினர்.
தமிழர் பண்பாட்டு அணிகலன்களையும் உடைகளையும் அணிந்து அணிவகுப்பும் நடத்தினர். விழாவில் அன்னை கதீஜா கல்லூரியின் தாளாளர் M.சயிதா பானு அவர்களும், முதல்வர் முனைவர் K.சுமதி அவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் பேசிய சிறப்புரையாளர்கள் மாணவிகளின் கண்காட்சியையும் பாடல்களையும் வியந்து பாராட்டினர். மேலும் இரவு உணவுடன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது.

akasc 5