உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்

உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை "நாளைய உலகம் நமதாகட்டும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் முஹல்லா ஜமாஅத் அமைப்புகளுடன்
இணைந்து தமிழகம் முழுவதும் நடத்த தீர்மானித்தது.

peram 4
முதல் நிகழ்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டம் விஸ்வக்குடி மற்றும் பூலாம்பாடியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் பூலாம்பாடி அல்ஹஸனாத் கல்விக் குழுமம், இக்ராஃ தீனிய்யாத் பாடசாலை - விஸ்வகுடி ஆகிய அமைப்புகள் இணைந்து "நாளைய உலகம் நமதாகட்டும்" என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முகம்மது இஸ்மாயில் அவர்களும் கல்விச் சிந்தனையாளர் ஏர்வாடி அஷ்ஃபக் அவர்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் மௌலவி.நூருல் அமீன் தாவூதி அவர்கள் "தொழுகையின் மூலம் வெற்றி" என்ற தலைப்பில் ஆரம்பமாக உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முகம்மது இஸ்மாயில் அவர்கள் "கல்வி அதிகாரம்" என்ற தலைப்பில் முஸ்லிம்கள் பெற வேண்டிய முதன்மை அதிகாரம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நெறியாளர் பேரா.அப்துர் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஏற்ற படிப்புகள் குறித்து Power Point Presentation மூலம் விளக்கி வகுப்பெடுத்தார். நிகழ்ச்சியில் திரளாக மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

peram 3