ஜமாத்துல் உலமா சபை நடத்திய சுதந்திர தின நிகழ்ச்சி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா தாருல் உலூம் சித்தீக்கிய்யா பள்ளிவாசலில் நடைபெற்றது.

தமிழகத்தின் மூத்த ஆலிம் உமர் ஃபாரூக் தாவூதி ஹஸ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு நகர வட்டார உலமாக்களும் மதரசா மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் கலந்து கொண்டார். தனது சிறப்புரையில் கீழ்வரும் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

பள்ளிப் பருவத்திலிருந்து படிப்படியாக பாடமாக படிப்பினையாக உள்வாங்க வேண்டிய உம்மத்தின் வரலாறுகளை ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அவ்வப்போது மட்டும் அறிந்து கொள்ளும் வழமையை கொண்ட சமூகமாக நாம் இன்று வழிகெடுக்கப்பட்டுள்ளோம். ஒரு வரலாற்று நூலை வாசிக்கும் போது ஆத்திரத்திலும் கவலையிலும் நெஞ்சடைத்தது.
வீரப்போர் புரிந்து மரணித்த முஸ்லிம் தளபதியின் குடும்பத்திற்கு பாளையக்காரர் பூலித்தேவன் நிலங்களை இனாமாக எழுதி தந்தது தொடர்பான செப்புப் பட்டயத்தை பழைய இரும்பு ஈயம் பித்தாளை வாங்குபவனிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி தின்றுள்ளனர் அவரது வாரீசுகள். (வறுமையால் அல்ல. அறியாமையால் நடந்தது)
" History is the Teacher of Life " என்று சொல்லுவார்கள்.வரலாறு தான் வாழ்க்கையை கற்றுதரும். நமது வாழ்கையை வரலாறு காட்டும் திசையில் அமைத்துக்கொள்ளும் அறிவார்ந்த
தலைமுறை உம்மத்தில் உருவாகும் போது நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்படலாம்.