போடிநாயக்கனூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

30.09.2018 அன்று தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூரில் முஹம்மதியா பைத்துல்மால் சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்கரையுடைய இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது மஹல்லாக்களில் இதுபோன்று
கல்விப் பணிகளையும் கலாச்சார உயிர்ப்புப் பணிகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் உம்மத்தின் அடுத்த தலைமுறை அறிவுத் தலைமுறையாக உலகில் மீண்டும்
உயர்ந்து நிற்கும். கல்வியும் கலாச்சாரமும் பேசு பொருளாக கொண்ட சமூகத்தில் தான் அமைதியும் நாகரிகத்தின் வளர்ச்சியும் நிலைபெற்றிருக்கும் என்ற செய்தியை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.