காஷ்மீர் : பறிபோகும் மனித உரிமைகள்

kashmeer
ரியாஸ் அஹமத் ஷா எனும் 22 வயது இளைஞன் அவனது வேலை முடித்துத் திரும்பிவரும்போது இராணுவம் சுட்டதில் சிறுநீரகம், நுரைஈரல் முதலான உறுப்புகளைப் பெல்லட்கள் துளைத்ததால் மாண்டுள்ளான். இன்றும் காஷ்மீர் மக்கள் வீதியில் தங்களுக்கு நீதி கேட்டு நிற்கிறார்கள்… வழக்கம் போல போலீசும், மற்ற படைப் பிரிவுகளும் மனித உரிமைகளை மதிக்காமல் வன்முறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
காஷ்மீர் ஒவ்வொரு முறையும் அந்தப் பள்ளத்தாக்கு அதிரும்போதும், `இதோ இதுவே கடைசி. இத்துடன் எல்லாம் சரியாகிவிடும்' என்றே சமாதானமாகிறது இந்தியா. ஆனால், இந்தியாவின் இந்தப் பகல்கனவு கலைந்துக்கொண்டே வருகிறது.
புர்ஹான் வானி 22 வயது இளைஞன் எப்படிப் பயங்கரவாதியாக மாறினான் என்பதைக் காட்டிலும், அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் எப்படிக் கலந்துகொண்டார்கள் என்பதை ஆராய்வது அவசியம். அதை செய்ய மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை. கடந்த ஜூலை 8-ம் தேதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை 50 நாட்கள் ஆகியும் இப்போது வரை நிற்கவில்லை.
இந்த வன்முறை குறித்து ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலிலைப் பாருங்கள்.
ஜம்மு - காஷ்மீரில், வன்முறை மற்றும் போராட்டத்தை அடக்க கடந்த, ஆகஸ்ட் 11ம் தேதி வரை, 32 நாட்களில் 3,000 'பெல்லட்' (pellet) 'கார்ட்ரிட்ஜ்'க்கள் பயன்படுத்தப் பட் டன. 13 லட்சம் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'பெல்லட்' குண்டுகள் உட்பட, 14 வகையான ஆயுதங்கள், கலவரத் தடுப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த மாதம் ஜூலை 8ம் தேதி முதல், ஆகஸ்ட் 11ம் தேதி வரை, 8,650 கண்ணீர் புகைக் குண்டுகளும், 2,671 பிளாஸ்டிக் 'பெல்லட்'களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சி.ஆர்.பி.எப். தெரிவித்துள்ளது.
பெல்லட் குண்டுகள் எப்படிப்பட்டவை : பெல்லட் குண்டுகளில், ஈயத்துகள்கள் அடைக்கப்பட்டுள்ளன. இவ்வகை குண்டு, துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்து தாக்கும் போது, ஈயத்துகள் நுாற்றுக்கணக்கில் பீறிட்டு வெளியேறி தாக்கி காயப்படுத்தும். இந்த ஈயத்துகள்கள், குறிப்பிட்ட ஒரே பாதையில் செல்லாமல், ஒரே சமயத்தில் பலரை தாக்கும். ஈயத்துகள்கள் மிக ஆழமாக பாயாதபோதும், உடலின் மென்மையான தோலை ஊடுருவி பலத்த காயங்களை ஏற்படுத்தும். கண்களில் படும்போது, பலத்த சேதம் ஏற்பட்டு பார்வை பறிபோகும் அபாயம் அதிகம்.
அரசு இயந்திரமே முன்னின்று நடத்து மனித உரிமை மீறலை எப்படி ஏற்றுக் கொள்கிறது மத்திய அரசும் மாநில அரசும். மனித உரிமை ஆர்வலர்களைத் தவிர மற்றவர்களுக்கு காஷ்மீர் மக்கள் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் உள்ளாக்கப்படுவது குறித்த பிரஞ்சை ஏன் வரவில்லை? சொந்த நாட்டு மக்கள் மீதே கொலை வெறித் தாக்குத நடத்துகிறது ஒரு ஜனநாயக? அரசு