அம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா!

அம்மாபட்டினம் – தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியில் விளையாட்டு தின விழா!
14.02.2017 செவ்வாய்க்கிழமை அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், தாருஸ்ஸலாம் (ஸ்கூல் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸ்) பள்ளியின் “விளையாட்டு தின விழா” நடைபெற்றது.
விழாவில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி

பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திருமதி அஃப்தாப் பேகம் எம்.ஏ., எம்.எட் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விளையாட்டுப் போட்டிகளில் தாருஸ்ஸலாம் பள்ளியில் ஆலிம் படிப்புடன் பள்ளிக் கல்வியையும் பயிலும் 6,7,8,9 வகுப்புகள் மற்றும் +1,+2 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. விழாவில் தாருஸ்ஸலாம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் தாளாளார் திருமதி சயீதா பானு எம்.ஏ., பி.எட் கலந்து கொண்டார்கள். விழாவினை தாருஸ்ஸலாம் பள்ளியின் ஆசிரியைகள் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.