நாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா

தமிழக முஸ்லிம் முஹல்லாக்கள் அனைத்திலும் இஸ்லாமியப் பாடத்துடன் அரசின் பாடங்களையும் இணைத்து கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டு தோறும் பல புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில்.....
10.03.2017 அன்று குமரி மாவட்டம் நாகர்கேவிலில்
இக்ரா அறக்கட்டளையின் சார்பில் உருவாக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனம டாக்டர் அப்துல் கலாம் சர்வதேசப் பள்ளியின் துவக்க விழா நடைபெற்றது. சிவிழி சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது இது போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நாம் சம்பாதிக்கும் செல்வத்தின் பெரும் பகுதியை நமது தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு செலவிடுவோம் அதுவே சமூகத்தின் நிலையான வளர்ச்சி என்று கூறினார்.