நாகர்கோவிலில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி

12 - 3 - 2017 அன்று குமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்டத்தின் பல்வேறு ஜமாஅத் பொறுப்பாளர்கள், மூத்த கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், உலமாக்கள், பேராசிரியர்கள், பெண் கல்வியாளர்கள்,பல்வேறு சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என... சமுதாய ஆளுமைகளை ஒருங்கிணைத்த “பொற்காலம் திரும்பட்டும்“ கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் இக்ரா அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்விற்கு கேரளாவில் இருந்தும் கல்வி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் சமூகத்தை இணைக்கும் பிணைப்புச் சங்கிலி கல்விதான் என்பதை சிவிழி சலீம் வலியுறுத்திப் பேசினார்.