பெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி!

“ பொற்காலம் திரும்பட்டும்“ நிகழ்ச்சி பெங்களூரில் 26/11/2017 அன்று நடைபெற்றது. தொழில் நிமித்தமாக தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கல்வி மற்றும் வணிகத்தில் முஸ்லிம்களுக்கான இலக்கு அதை அடைவதற்கான வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. சமுதாயத் தளத்தில் மூத்தவர்களால் எந்தக் கருத்து அதிகமாக விவாதிக்கப்படுகிறதோ... அது வளர்ந்து வரும் அந்த சமூகத்து இளைஞர்களின் சிந்தனையில் ஆழமாக பதிந்து அதுவே அவர்களின் பேச்சாகவும் செயலாகவும் வாழ்வியல் இலக்காகவும் மாறிப் போகும்.
விழாக்கள் மற்றும் பொது ஒன்றுகூடல்களில்... சமூக வலைத்தளங்களில்... பயனுள்ளவற்றை மட்டுமே பேசுவோம் பயனுள்ளவற்றை மட்டுமே எழுதுவோம், அது நம் சந்ததியை வலிமைபடுத்தும், நமது மதிப்பீடுகளை மற்றவர்களிடம் உயர்த்தும். இந்த கருத்துக்களை சமூகநீதி முரசு ஆசிரியர் CMN. சலீம் அவர்கள் விழாவில் பேசினார்.