எல்லோருக்கும் எற்புடையதல்ல யோகா!

international-yoga-day

உடலையும் மனதையும் ஐக்கியமாக்குவதே ”யோகா.” யோகா என்பது சமஸ்கிருதச் சொல். யோகா எனும் யோகாசனம் உடலின் வாத, பித்த, சிலேத்துமத்தை சமப்படுத்தி உடலியக்கம் கச்சிதமாக இயங்க உதவும் ஒரு உடலியக்க பயிற்சி. ஆக இது ஒரு நோய்தீர்க்கும் வழிமுறை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம். நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு இது ஏற்புடையதல்ல! இந்தக் கருத்தை பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழகப் பள்ளிகளில் யோகாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைய ஆளுவோர் முயற்சித்த போது நவபாசாணங்களைக் கலந்து அதில் முருகனை படைத்து கோயில் கட்டிய அமரர் அருள்மிகு வடபழனி சித்தர் கடுமையாகக் கண்டித்தார். அதன் பின்னரே கல்வி உயர் அலுவலர்கள் யோகா பற்றி பேசுவதை நிறுத்தினர். அவரிடம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஞானம் தரும் சந்திரகலை என்னும் யோகா முறையைக் கற்றனர். இது ஒரு சுவாசப் பயிற்சி. இதை தக்க ஆசிரியர் இல்லாமல் கண்டிப்பாக செய்யக்கூடாது.
யோகாவில் உள்ள அம்சங்கள் இன்னின்ன பிரச்சனைக்கு இன்னின்ன தேகப்பியாசம் தீர்வு என வரையறுக்கிறது.
கருத்தரித்த பெண் சிரசாசனம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே சிறுமிகள் பத்மாசனம் போடக் கூடாது. இது விரைந்து பருவமடைதலை ஊக்குவிக்கும் ஆபத்து நிறைந்தது. அதிகளவு ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் வல்லமை பத்மாசனத்திற்குண்டு.
நேச்சுரோபதி எனும் வரையறுக்கப்பட்ட மருத்துவ முறையில் யோகாவின் சிலகூறுகள் நோய் தீர்க்க உதவுகிறது. எனவே இன்னின்ன பிரச்சனைக்கு தீர்வு காண இந்தவகை யோகா உதவும் எனற வகையில் இதனை ஒர் மருத்துவ அறிவியலாக நாம் பார்த்தால் தசைப்பிடிப்புவாத நோய்யுள்ளவர் எல்லா யோகாவும் செய்யக் கூடாது. முகக்கன்னங்கள் ஒட்டிப்போய் கன்னக் கதுப்பு இல்லாத ஒருவர் முகம் நல்ல தசைப்பிடிப்புடன் (ஙிஹிஙிலிசீ) யாகத் தோன்றிட தலைக்கு ரத்த ஒட்டத்தை கொண்டு செல்லும் சிரசாசனம் என்பதை ஒரு அளவாக தக்க வழி காட்டலுடன் செய்ய வேண்டும். அதுவும் காலையில் மலம் கழித்தபின் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். கண்ட நேரத்தில் செய்வது கூடவேகூடாது.
விபரீத கரணியாசனம் என்பது மல்லாந்து படுத்தபடி இரு கால்களை மெல்ல தூக்கி சைக்கிள் பெடலிங் செய்வது போல் மெல்ல ஒவ்வொருகாலை தரையில் ஊன்ற வேண்டும். இப்படி செய்வதால் உடலின் இரத்த ஓட்டம் உடலெங்கும் பரவி கெட்ட கொழுப்பைக் கரைக்கும். இதைச் செய்யும் போது தலையணை கூடாது. மேலும் கருத்தரித்த இளம் பெண், மாத விலக்காவைர்கள் இதனைச் செய்யக்கூடாது.
காலை மாலை முழுவதும் மேசையில் அமர்ந்தவாறு பணிபுரிவோருக்கு உடலின் மேல்பகுதி இரத்த ஓட்டம் குறைவதை இது சரி செய்யும். விபரீதமான நோய்களை நம் உடல் அண்டாமல் இது விரட்டும்.
யோகாப்பயிற்சி செய்வோர் உணவில் கட்டுப்பாடுகளை குறிப்பாக சில உணவுகளை முற்றாகவிலக்க வேண்டும் என்பது நியதி. இதை முஸ்லிம்கள் கண்டிப்பாக கடைபிடிக்க இயலாது. யோகா என்பது உடலையும் மனதையும் நலம் பெற வைப்பது. உடலும் மனமும் ஒர்மை பெற யோகா மட்டும் போதாது கூடவே இறை உணர்வும் தேவை. பக்தி தேவை. பக்தி என்பதை இணைத்து உடலை வளைத்து முறுக்கி சுவாசங்களை நெற்றி எனும் சுழி முனையில் நிறுத்திட ஒரு கடவுள் வேண்டும். கிருஸ்தவர்கள், சீக்கியர்கள் கூட தப்பலாம் முஸ்லிம்கள் இதை செய்ய முடியாது. அவர்கள் சுழிமுனையில் எதை நிறுத்தி யோகா நிட்டையில் ஈடுபட இயலும்?!
சுழி முனைக்கே திண்டாட்டம் எனும் போது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்சை எனும் இதர மைய்யங்களுக்கு யாரை எந்த உருவை அவர்களின் உயிராக ஒன்றியுள்ள அல்லாஹ்வை உருவமற்ற ஒரிறையை எப்படி சக்கரத்தில் நிறுத்த இயலும்.
அதனால்தான் முஸ்லிம்களுக்கு யோகா ஏற்புடையதல்ல. அது உடலியக்க பிரச்சனை உள்ளவர்களுக்கு அக்கால வைத்திய முறையுடன் அதாவது பிசியோ தெரபி என்கிற முடநீக்கியல் துறை வளராத காலத்தில் யோகா முறைகளை மருந்து உண்பவர்களுக்கு தரப்பட்டன. அவர்களுக்கு மூலிகை, கீரை, பசுங் காய்கனி போன்றவை யோகா அப்பியாசம் நன் முறையில் பலனளிக்கத் தரப்பட்டன.
மொத்தத்தில் உடல் நலமுடன் இருக்க இரத்த ஓட்டம் செம்மையாக வேண்டும். இது செம்மையாக மூச்சு பயிற்சியுடன் அதாவது போதுமான பிராணவாயுவுடன் ரத்த ஓட்டம் நடைபெறும் போது உடல் புத்துணர்வாகும். எனவே இது போல் உடல் நலனுக்கான யோகாவை ஒரு உடலியக்கப் பயிற்சியாக கொள்ளலாமே தவிர வலிந்து பொதுமைப் படுத்துவது உள்நோக்கம் கொண்டது, கண்டிக்கத்தக்கது.
ஒரு இந்து தன் மனதில் ஒருகடவுளின் உருவை நிறுத்தி தியானம் செய்யலாம். ஆனால் உருவ வழிபாட்டினை ஏற்காத முஸ்லிம்கள் மீதும் யோகாவை திணிப்பது அழகல்ல. அவர்களின் வணக்க வழிபாட்டுக்குள் இன்னொன்றை திணிப்பது எதிர்கால ஆபத்தாக மாறும். சகிப்புத்தன்மை, இணக்கம், மற்றவர்களை மதித்தல், அன்பு பாராட்டல் போன்ற இந்துப்பண்புகள் இந்துக்களிடம் மங்கிவருவதன் அடையாளம்தான் இது என்ற அச்சம் மேலெழும்பி வருகிறது. தேசத்திற்கு இது நல்லதல்ல.
- க.குணசேகரன்