முகம்மது முஸ்தபா, நாகூர்

நவம்பர் மாத தலையங்கம் அருமையான் செய்தியை தாங்கி வந்தது சிறப்புகுரியது. வணிகப் பாரம்பரியமும், தொழிலில் சிறப்பான செயல்பாடும் கொண்ட முஸ்லிம் சமூகம் தன்னுடைய பாரம்பரியத்தை மறந்து தொழில் செய்யும் திறமையற்று ஐந்துக்கும் பத்துக்கும் அலைபாயும் நிலைக்கு வந்திருப்பது வேதனைக்குரியது. மீண்டும் பாரம்பரியத்தை நோக்கி திரும்புவது தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் பெரும் பயனாக அமையும். வணிகத்தை நோக்கி முஸ்லிம் சமூகத்தை திருப்புவதற்காக நீங்கள் செய்து வரும் பணி மெச்சத்தக்கது. உங்கள் பணி சிறக்கவும் தொடரவும் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக ஆமீன்.