அஹ்மது ஜெய்லானி, பெங்களூர்

சிரியா குறித்த கட்டுரைகளை படித்த போது உலகமெங்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நடக்கும் சூழ்ச்சி வலையையும் அதன் பின்னணியையும், அந்த சூழ்ச்சியில் பலியாகிப் போன முஸ்லிம்களின் பலவீனத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. இஸ்ரேல் என்ற யூத நாட்டுக்காக குழந்தைகள் பெண்கள் என பல லட்சம் சிரியா முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு முஸ்லிம்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை துக்கம் தொண்டையை அடைக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை குற்றமென கருதாத முஸ்லிம் நாடுகளை எப்படி அழைப்பது? அல்லாஹ் தான் சிரியா மக்களுக்கு பாதுகாப்பையும் மனநிம்மதியையும் வழங்க வேண்டும்.