நஸ்ருதீன், திருச்சி

கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாகிப் அவர்கள் குறித்து முதல் தலைமுறை மனிதர்கள் தொடரில் படித்த போது அகமகிழ்ந்து போனேன். முஸ்லிம் லீகர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஜானி சாகிப் அவர்களின் வரலாற்றுப் பக்கங்கள் படிக்க படிக்க எனக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அரசியலிலும் பொது வாழ்விலும் அவருக்கிருந்த ஈடுபாடு மெச்சத்தக்கதாக இருந்திருக்கிறது. அவர் போன்றவர்கள் என் போன்ற வாழும் தலைமுறைகளுக்கு நல்ல முன்மாதிரிகள். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அவருக்கு சுவனத்தை வாழ்விடமாக்குவானாக. ஆமீன்.