ரஹ்மதுல்லாஹ், விழுப்புரம்

சிரியாவில் நடக்கும் போர் : முஸ்லிம்களுக்கு எதிரான அரக்கத்தனமான அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களே ஆயுதம் தூக்கிப் போரிடுவதைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. அரசியலுக்காக பதவிக்காக சொந்த சகோதரனையே கொல்லும் அரக்கர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்ளட்டும். எதிரிகளின் சூழ்ச்சி வலையிலும் சொந்த சகோதரர்களின் ஆயுதத் தாக்குதலிலும் மரணிக்கும் சிரியா முஸ்லிம்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவர்களுக்கு உயர்வளிப்பானாக. சிரியாவில் வாழும் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவானாக. ஆமீன்.