ஜமீல் அஹ்மது, கடலூர்

மகனை பறிகொடுத்த ஒரு இமாம் இந்தியாவுக்கும் சொல்லும் செய்தி! என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்லாத்தை கற்றுணர்ந்தவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பலவற்றில் முக்கியமானது நிதானம். அது, மகனை பறிகொடுத்த மௌலானா இம்தாதுல் ரஷீத் அவர்களின் பொறுப்பான நடவடிக்கைகளில் வெளிப்பட்டுள்ளது. பொறுமையாளர்களுக்கு உரிய கூலியை அவருக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக. கலவரங்களை தூண்டும், மூண்ட கலவரங்களின் மூலம் தனது அரசியல் பொருளாதார வெறியை தனித்துக் கொள்ளும் மிருக குணம் கொண்டவர்களுக்கு ஒரு இமாம் நடத்திய மனிதநேயப் பாடம். இந்திய அரசியல்வாதிகளும் மதவெறி பிடித்த மனித மிருகங்களும் கொஞ்சமாவது மனித உயிரின் மதிப்புகளை உணர்ந்து கொள்ளட்டும்.