சதகதுல்லாஹ் மன்பயீ, சென்னை

பாரம்பரிய மதரஸாக்களின் தேவையும், அதன் உருவாக்கத்தில் கற்றுத் தேறி சமூகத்திற்காக சளைக்காமல் பணி செய்த ஆலிம்களின் சமூக பங்களிப்பும் மறுக்க முடியாதது. அல்லாஹ் அந்த ஆலிம்களுக்கு ஈருலகிலும் அருள்புரிவானாக. ஆமீன். இறைப்பணியாற்றும் ஆலிம்களை உருவாக்குவோம் கட்டுரையின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொண்டு பாரம்பரிய மதரஸாக்களை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியை துரிதப்படுத்துவது அவசியமான அவசரமான ஒரு காரியமாகும். அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து சமூகப்பணியாற்றும் ஆலிம்கள் தான் சமூக இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் அவசியம் தேவை.