மஸ்கட்டில் இரண்டு நாள் பயிலரங்கம்

நல வளயடட வழ
தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் கல்விப் பணியாற்றும் சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற தொடர் முயற்சியாக......
மஸ்கட்டில்.... கல்வி ஆர்வலர்கள் பள்ளி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் ஆலிமாக்கள் ஆகியோர் கலந்து கொணட இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
எது கல்வியாக இருக்க வேண்டும் முஸ்லிம்கள் கல்வித்துறையை எப்படி
கையாள வேண்டும் என்பது தொடர்பான முழுமையான வகுப்பு நடைபெற்றது.
மஸ்கட்டில் "கொடிக்கால் சேக் அப்துல்லாஹ்" தமிழ் படைப்பாளிகளின் பார்வையில்..! நூல் வெளியீட்டு விழா
"கொடிக்கால் சேக் அப்துல்லாஹ்" தமிழ் படைப்பாளிகளின் பார்வையில்..! என்ற நூலின் பதிப்பாசிரியர் மஸ்கட் பாசில் அலி அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக ஒரு சமூகப் போராளியின் சம கால வரலாறும் அவரைப்பற்றி பல தரப்பட்ட ஆளுமைகளின் உளமார்ந்த ஆக்கங்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
முஸ்லீம் சமூகம் அதிகம் ஆர்வம் காட்டாத செயல். ஆனால் அந்த சமூகத்தின் வேருக்கு நீர் பாய்ச்சும் விவேகமான செயல். மூத்தவர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ்....
சாதியப் புழுதி அனலை கக்கும் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகவும் சிறுபாண்மை மக்களின் உரிமை மீட்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும் 60 ஆண்டு காலமாக ஓய்வின்றி உழைத்து வரும் 83 வயது இளைஞர் இன்றைய சில தலைவர்கள் போல....
அரசியல் அதிகாரம் இன இழிவை நீக்கும் என்ற ஏமாற்று வார்த்தைகளை
விதைக்காமல்…
ஏகத்துவம் என்ற சர்வதேசிய இறையியல் கோட்பாடோடு இணைவதே
பிறப்பின் அடிப்படையிலான அவமானத்தை துடைத்தெறியும் என்று தன்னை இஸ்லாத்தோடு இணைத்து வழி காட்டியவர்
மாற்று சித்தாந்தத்தை கொண்டவர்களின் கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் கூட…
சமூக விடுதலையில் ஆர்வமுடைய அனைவரும் வாங்கி வாசித்து பாதுகாக்க
வேண்டிய நூல்