முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்!

Untitled-1

இஸ்லாமிய சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும். இஸ்லாமிய அடித்தளத்தில் நின்று உலகின் அனைத்து அறிவுகளையும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக 2016 நவம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்களும் சென்னை மண்ணடி மூர் தெருவில் உள்ள இந்தியன் பேலஸ் ஹோட்டலில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆர்வமுள்ளவர்களுக்காக முனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தால் நடத்தப்பட்டது.
இரண்டு நாட்களும் பல கல்வியாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.தமிழகம் முழுவதில் இருந்தும் வந்த 140 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்த பயிற்சி முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இரண்டு நாளும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததது, பல்வேறு புதிய செய்திகளை தெரிந்து கொண்டோம் மேலும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
முதல்நாள் நிகழ்ச்சி :

முஜீபுர் ரஹ்மான் உமரி (இஸ்லாமிய அழைப்பாளர்

umari

நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரர் முஜீபுர் ரஹ்மான் உமரி (இஸ்லாமிய அழைப்பாளர்) ஒரு முஸ்லிம் முஸ்லிமாக வாழவும், சமூகப் பணி செய்யவும் உளரீதியாக தங்களை எப்படி தயார் செய்வது என்பது குறித்தும் தனி மனித வாழ்வை இஸ்லாம் கூறிய வகையில் அமைத்து கொண்டால் தான் நமது சமூகப் பணிகள் வெற்றி அடையும் என்பதையும் எடுத்துச் சொல்லி உளமாற்றத்தை ஏற்படுத்தும் தர்பியா - தஸ்கியா வகுப்பு நடத்தினார்.
cmnசலீம் (ஆசிரியர் சமூக நீதி முரசு)

cmn
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரையிலான 1400 ஆண்டு கால இஸ்லாமிய கல்வி வரலாறை மிக முக்கிய வரலாற்று ஆவணங்களோடு பவர் பாயிண்ட் வகுப்பாக நடத்தினார்.அதில் முஸ்லிம்கள் கல்வியில் கோலேச்சியிருந்த காலத்தையும், வீச்சியடைந்த காலத்தையும், மீண்டும் அதை சீர் செய்து மீண்டும் பொற்காலத்தை திரும்பச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார். வாழும் நமது இளம் தலைமுறைகளையும், வரப்போகும் அடுத்த தலைமுறை ஆண்களையும் பெண்களையும் யாராக உருவாக்க வேண்டும் என்ற இலக்கையும் தெளிவாக்கி அதற்கான வழிமுறை குறித்து விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் செயல் திட்டங்களை விளக்கினார்.
மௌலவி கலீல் முனீரி (ஆலிம் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)

muneer
சமூகம் மாற்றம் என்பது தனி மனித மாற்றத்திலிருந்தே தொடங்குகிறது. முஸ்லிம் சமூகம் தனது வாழ்வில் இஸ்லாமிய விழுமியங்களை செயலாக மாற்றுவதை மறந்து, உலக இன்பங்களை நோக்கி எப்போது ஓடியதோ அப்போது தொடங்கியது முஸ்லிம்களின் சரிவு. மீண்டும் ஷரீஆவோடு இணைந்த வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டுமானால் நம்முடைய கல்விமுறை இஸ்லாமிய அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
அதன் பிறகு முதல் நாள் அல்லாஹ்வின் அருளால் இனிதே நிறைவானது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி :

 பேராசிரியர் ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி (பேரா, புதுக் கல்லூரி, சென்னை)

bilali

இமாம் கஸ்ஸாஅலி (ரஹ்) அவர்களின் கல்வி சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார். இஸ்லாமிய பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும். அதில் இடம் பெறும் பாடப் பிரிவுகள், ஆசிரியர்களின் பொறுப்புகள், மாணவர்களின் கடமைகள், பெற்றோர்களின் பங்களிப்பு, சமூக பொறுப்புகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு (கல்வியாளர்)

prince

கல்விக் கொள்கையில் பாஜக கொண்டு வரத் துடிக்கும் சமத்துவமற்ற காவிமயக் கல்வி கொள்கை இந்திய சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து பேசினார். தற்போது மத்திய அரசு முன்னெடுக்கும் கல்விக் கொள்கையில் உள்ள பாதிப்புகளையும், பேராபத்துகளை எடுத்துக் கூறினார். அதை முறியடிக்க நாம் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள், சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டிய தேவையையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அ.மார்க்ஸ் (மனித உரிமை ஆர்வலர்)

marx
காவிமாவியமாகி வரும் கல்வி என்ற தலைப்பில் பேசினார். காவிச் சிந்தனை கொண்டவர்கள் சமூகத்தை காவியாக மாற்ற தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துகிறார்கள். ஆட்சியில் இருக்கும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றுகிறார்கள். இப்படி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படி அவர்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்திலும் அவர்களின் செயல்பாடு எப்படி அமைந்தது என்பதை வரலாற்றுத் தகவல்களோடு விரிவாகப் பேசினார்.

காஜா ஷெரீஃப் (முதல்வர் : டைம் ஸ்கூல், திருநெல்வேலி)

haja
கல்விப் பணியில் ஈடுபடுபவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்தும், கல்விப் பணிகளில் ஏற்படும் இடர்பாடுகளைகளையும் வழிமுறைகள் குறித்தும், பேசினார். மேலும் நாம் முன்னெடுக்கும் இந்தப் பணி நமது பார்வைக்கு மலைப்பாக தெரிந்தாலும், இறைவனின் ஆற்றலில் இது மிக சாதாரணம்.எனவே இது போன்ற முயற்சிகளை விரிவாக செய்ய தயங்க வேண்டியதில்லை என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
சயிதாபானு (தாளாளர் : அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அம்மாபட்டினம்)

mam
சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். சமூக மாற்றம் குறித்து யார் எவ்வளவு பேசினாலும் உண்மையில் அது பெண்களால்தான் நடைபெறும். குழந்தைகள் கற்கத் தொடங்குவது பள்ளிகளில் சேர்ந்த பின் இல்லை. தாயிடமிருந்தே தொடங்கிறது. திருமண உறவு தொடங்கி குழந்தை கருவாக உருவாகத் தொடங்கும் நாட்களில் இருந்தை வளர்ப்பு தொடங்கி விடுகிறது என்பதை விளக்கி ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் சமூக மாற்றத்தில் பங்களிப்பு செய்ய முடியும் என்பதை விளக்கிப் பேசினார்.
மௌலவி வலியுல்லாஹி ஸலாஹி (துணை ஆசிரியர் சமூக நீதி முரசு)

vali
இறைவனின் படைப்புகளை நமது சுயலாபங்களுக்காகவும், அலட்சியத்தாலும் சீரழித்ததின் விளைவாக உலகில் ஏற்படும் காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் கடும் வௌஙிளப் பெருக்கு, கடும் வறட்சி போன்ற அபாயங்களை விளக்கினார். எளிமையான வாழ்க்கைக்கு மாறுவதுதான் இதற்கான தீர்வு என்பதையும் எடுத்துரைத்தார். பைத்துல் ஹிக்மாவின் சென்னை பொறுப்பாளர் சகோ.கருணைஅலி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்