செலவில்லாத சித்த மருத்துவம்!

89. நோயாளிகளுக்கு உடல் சக்தி பெற :
கூகை நீரை கொஞ்சம் நீர் விட்டு பசை போல காய்ச்சி பின்பு கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். அவ்வாறு கலக்கும் போது சிறிதளவு சாதிக்காய் பொடியும் சர்க்கரையும் சேர்த்து கிண்டி சாப்பிட்டு வரவும்.
90. நல்ல பசி எடுக்க :
நிலவேம்பு பொடி 10 கிராம், கிராம்பு, நன்னாரி, கருவப்பட்டை, வேப்பம்பட்டை, ஏலம் இவை ஒவ்வொன்றிலும் 5 கிராம் எடுத்து பொடித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து லு டீஸ்பூன் பொடியை லு கிளாஸ் காய்ச்சிய பாலுடன் சாப்பிட பசி உண்டாகும்.
91. தீப்புண் தோல் உரிவுக்கு :
மெழுகு 10 கிராம், தேங்காய் எண்ணெய் 20 கிராம் சேர்த்து சூடு உண்டாக்கி ஆறிய பின்பு காயத்தில் போட்டு வர புண் ஆறும்.
92. கப இருமலுக்கு :
வால் மிளகை வறுத்து தூள் செய்து கருப்பு கட்டி சேர்த்து லு டீஸ்பூன் அளவு தினமும் 6 வேலை சாப்பிட குணமாகும்.
93. ஆறாத புண்ணிற்கு :
வங்காள பச்சை 1 பங்கு நெய் 15 பங்கு சேர்த்து போட்டு வர புண் ஆறும்.
94. நாக்கிலும் உதட்டிலும் உண்டாகும் புண்ணுக்கு :பசுவின் பால் சிற்றா மணக்கு எண்ணெய் வகைக்கு 200 மில்லி சேர்த்து அதில் வெந்தயம், வெங்காயம், மயிர் மாணிக்க பச்சிலை, வகைக்கு 50 கிராம் எடுத்து அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து காலை, மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குணமாகும்.

95. இரத்தக் கடுப்புக்கு :
வாழைப் பூவை இடித்து ரு படி சாறு பிழிந்து விளாமிச்சை வேர் 5 கிராம் அரைத்து போட்டு காலை, மாலை சாப்பிட குணமாகும்.
96. கால் வீக்கத்திற்கு : ஆனை கத்தாழை அல்லது ரெயில் கத்தாழை மடலை தீயிட்டு வாட்டி பிழிந்த சாற்றுடன் வரகு மாவை சேர்த்து குழம்பாய் காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வத்தும்.
97. நெஞ்சில் ஏற்படும் கபத்திற்கும் இருமலுக்கும் :
திப்பலி 20 கிராம், சுக்கு, மிளகு வகைக்கு 10 கிராம், நற்சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், அரத்தை வகைக்கு 5 கிராம் இவைகளை வெதுப்பி தூள் செய்து அதற்கு சமமாக சர்க்கரை சேர்த்து தேன் விட்டு பிசைந்து கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட தீரும்.
98. கக்கல் விக்கலுக்கு :
கிராம், ஓமம், சீரகம் இவைகளை சம அளவு எடுத்து வெதுப்பி தூள் ஆக்கி மயில் இறகு சுட்ட சாம்பலை சமமாக சேர்த்து 1 டீஸ்பூன் அளவு தேனுடன் சேர்த்து சாப்பிட குணமாகும்.
99. மார்புச் சளிக்கு :
பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து காலை, மாலை, சங்களவு தேனுடன் சாப்பிட குணமாகும்.
100. விந்து ஊற : பூனைக்காலி விதை, நிலப்பன்னைக் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு மூன்றையும் சூரணமாக்கி காலை, மாலை, 1 டீஸ்பூன் அளவு தேனுடன் சேர்த்து சாப்பிட விந்து ஊறும்.
101. ஆண் உறுப்பு விரைப்பு பெற :
எட்டிக் கொட்டை, அழுக்கரா கிழங்கு, வசம்பு மூன்றையும் சமமாக எடுத்து நைசாக அரைத்து பசும் பாலுடன் குழைத்து ஆண் உறுப்பில் தேய்த்து விட ஆண் உறுப்பு விரைப்பு பெறும்.
102. வாந்தியை நிறுத்த :
நாயுருவி இலை பிரண்டை கொழுந்து இரண்டையும் கொட்டைப் பாக்களவு எடுத்து அரைத்து இளம் வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வாந்தி நிற்கும்.
103. வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தால் :
ஆடாதொடை இலைச்சாறும் தேனும் சம அளவு சேர்த்து வேளைக்கு 1 டீஸ்பூன் அளவு காலை, மதியம், மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும்.
அன்பான வாசக நண்பர்களே உங்களுக்குத் தேவையான மருத்துவ சந்தேகங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய “செலவில்லா சித்த மருத்துவம்” என்ற புத்தகத்தை ரூ.150/ எம்.ஓ. செய்து பெற்று பயனைடய கேட்டுக் கொள்கிறேன்.