செலவில்லா சித்த மருத்துவம்

வெள்ளைப்பூண்டு :
இதன் குணங்களை முதலில் பார்ப்போம். பின்பு அதன் மூலம் நமக்கு கிடைக்கும் வாழும் வழி பார்ப்போம்.
இரத்தக் கொதிப்பு உடையவர்கள் கால் ஸ்பூன் பவுடரை தேனுடன் கலந்து சாப்பிடலாம். இந்த பொடியை பாலுடன் சேர்த்து சுடவைத்து ஆறிய பின் பருக்கள் மீது போட்டால் குணமாகும்.
10 கிராம் பொடியுடன் 5 கிராம் சீனி சேர்த்து பாகாக்கி 1 ஸ்பூன் அளவு பெரியவர்களுக்கும் அரை ஸ்பூன் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் சுவாச காச நோய் குணமாகும்.

கொஞ்சம் பொடியை வெந்நீரில் கரைத்து தெளிவான நீரை காது வலிக்கு 2 சொட்டு விட்டால் காது இரைச்சல் காது வலி குணமாகும். மூத்திரம் வராமல் சிரமப்பட்டால் கொஞ்சம் பூண்டு மாவை வெந்நீரில் குழைத்து அடிவயிற்றில் தடவி வைத்தால் சிறுநீர் இறங்கும். வாயு தொந்தரவு இருந்தால் கொஞ்சம் பொடியையும் சிறிது பெருங்காயத்தையும் சுடுநீரில் சேர்த்து குடித்தால் வாயு மாறும்.
கடுமையான காய்ச்சலால் நோயாளி தூக்கம் இன்றி புலம்பினால் சிறிது பவுடரை வெந்நீரில் களிம்பாக்கி கால் பாதங்களில் வைத்தால் புலம்பல் மாறி நன்றாக தூங்கி விடுவார். இவ்வளவு சீரும் சிறப்பும் உடைய வெள்ளைப்பூண்டு பவுடரை தொழிலின்றி கஷ்டப்படும். அன்பான வாசகர்கள் தயாரித்து அழகிய 50 கிராம், 100 கிராம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்து பொருள் ஈட்டி குடும்ப வருமானத்தை பெருக்கலாம்.
இதை தயாரிக்கும் முறை: முதலில் வெள்ளைப்பூண்டிலிருந்து பல் அரிசியை தனியாக பிரித்து எடுக்கவும். ஒரு கம்பி வலையில் பரப்பி அந்த கம்பி வலைக்கு 2 அடிக்கு கீழ் உமிப் பொடியை போட்டு புகை எழுப்ப வேண்டும். இந்த புகை மேல் சொன்ன கம்பிவலை மற்றும் வெள்ளைப் பூண்டு அரிசியை ஊடுருவி செல்ல வேண்டும்.
நெருப்பு உண்டாகி பூண்டு அரிசியில் சூடு ஏற்படக்கூடாது. இப்படியாக புகை போட்டு 6 மணி நேரம் கழித்து வெள்ளைப்பூண்டு அரிசியை எடுத்து ஒரு பாயில் போட்டு அழுத்தி தேய்க்க வேண்டும். மேல் தோல் எல்லாம் உறிந்து விடும்.
அதன்பின் கிரைண்டரில் போட்டு ஆட்டி, சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை விரித்து அதன்மேல் அடை தட்டி நன்கு காய வைத்து, பின் மாவாக்கும். கிரைண்டரில் போட்டு பொடியாக்கி காற்று புகாத பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வியாபாரத்தை தொடங்கலாம். இதுபற்றி மேலும் விபரம் வேண்டுவோர் என்னுடைய போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர்.K.P.பால்ராஜ், RTSMPSI
சாம்பவர் வடகரை - 627856.
செல் : 9487348703