செலவில்லா சித்த மருத்துவம்

99. மார்புச் சளிக்கு :பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு தேனுடன் கொடுக்க சளி தீரும். 

100. விந்து ஊற :பூனைக்காலி விதை, நிலப்பானை கிழங்கு பூமிசக்கரைக் கிழங்கு மூன்றையும், சூரணமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட விந்து ஊறும். 

101. வாந்தியை நிறுத்த :நாயுருவி இலை, பிரண்டைக் கொழுந்து இரண்டையும் கொட்டை பாக்களவு எடுத்து அரைத்து இளம் வென்னீரில் கலக்கி கொடுக்க வாந்தி நின்று விடும். 

102. வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தால் :ஆடாதொடை இலைச்சாறும், தேனும் சம அளவு சேர்த்து வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு காலை, மதியம், மாலை இப்படி மூன்று நாட்கள் சாப்பிட சரியாகி விடும். 

103. வயிற்று வலிக்கு :முற்றிய முருங்கைப் பூ, முற்றிய பிரண்டை வகைக்கு ஒரு பிடி ஒரு முடி கொப்பரைத் தேங்காய் இவைகளை இடித்து பிட்டவித்து சாறு பிழிந்து கொடுக்க வயிற்று வலி தீரும். 

104. குஷ்ட நோய்க்கு மருந்து :பரங்கிப் பட்டை தூள் நூறு கிராம், கொடிவேலிவேர், நீரடி முத்து, செந்தகம் இவைகளின் தூள் வகைக்கு இருபது கிராம், சுத்தித்த சேங்கொட்டை முப்பது, நாட்டு எள் ஐநூறு கிராம் இவைகளை எல்லாம் மைய இடித்து வேளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட்டு வென்னீர் குடித்து வர நாற்பத்தி ஒரு நாளில் குஷ்டம் குணமாகும். 

105. இந்திரியம் அதிகரிக்க :ஆழி விதையை பாலில் வேக வைத்து பின் வெல்லம், நெய் சேர்த்து லேகியமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட்டு வர விந்து ஊறும். 

106. சொப்பனத்தில் விந்து வெளியேறினால் :துளசி வேர் பொடி, வெற்றிலைச் சாறு, கருப்புக் கட்டி சேர்த்து தினமும் இரவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் நின்று விடும். 

107. மூட்டு வலிகளுக்கு :புதினா சாறு, நல்லெண்ணெய் வகைக்கு இருநூறு மில்லி எடுத்து சேர்த்து காய்ச்சி, இருபது கிராம் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு மூட்டுகளில் தேய்து வென்னீர் இட்டு வர குணமாகும். 

109. முகப் பருவுக்கு :புனுகை தடவி வரலாம், திருநீற்று பச்சிலை சாற்றை தேய்த்து வரலாம், சங்கை சுட்டு உணரத்து போட முகப்பரு நீங்கும். 

110. வண்டு கடி, காணகடிக்கு :குப்பைமேனி இலைச்சாறு அல்லது வேலி பருத்தி இலைச்சாறு, அல்லது ஆடுதின்னா பாளைச் சாறு, அல்லது வெள்ளை காக்கணத்தி இலைச்சாறு இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மேல் பூச்சாக பூசினாலும் விஷக்கடி மாறி விடும். 

அன்பான வாசக நண்பர்களே உங்களுக்குத் தேவையான மருத்துவ சந்தேங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய “செலவில்லா சித்தமருத்துவம்” என்ற புத்தகத்தை ரூ.150 எம்.ஒ. செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
dr.கே.பி.பால்ராஜ், செல் : 9487348703