செலவில்லா சித்த மருத்துவம்,

                                                                                                                                                                    மருத்துவர்  பால்ராஜ்  செல் : 9487348703
1. கடுமையான வாத நோய்க்கு :
குப்பைமேனி இலைச்சாறு 100 மில்லி, மஞ்சள் 5 கிராம், சுக்கு 15 கிராம், பூண்டு 5 கிராம் அரைத்து எடுத்து விளக்கெண்ணெய் 200 மில்லியில் காய்ச்சி தேய்த்து மறுநாள் வெண்ணீர் வீட்டு கழுவ குணமாகும்.
2. மூட்டு வலிகளுக்கு :
மஞ்சள் பொடி 10 கிராம், வெந்தையம் 10 கிராம் இஞ்சிச்சாறு 100 மில்லி இவைகளை காய்ச்சி எடுத்து மேலால் தேய்க்க வலிபோகும்.
3. முகப் பருவுக்கு :
கடுக்காய்தொலி 20கிராம், மஞ்சள் 15 கிராம், திருநீற்று பச்சிலை 15 கிராம், நாயுருவி இலை 15 கிராம், மிளகு 3 கிராம், ஜாதிக்காய் 5 கிராம் ஆகியவற்றையும் பொடிபண்ணி வாஸ்லின் சேர்த்து மேலால் போட்டு வர முகப்பருபோய் விடும்.
4. உடல் எடை குறைய :
கொள்ளு 10 கிராம், சீரகம் 10 கிராம், சுக்கு 10 கிராம் நன்னாரிவேர் 10 கிராம், யாவற்றையும் பொடித்து வேளைக்கு 1 டீஸ்பூன் காலை மாலை உணவுக்கு முன்பு வெண்ணீர் சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும்.
5. கால் ஆணிக்கு :
குப்பைமேனி இலைபசையை விளக்கெண்ணைய்யில் சேர்த்து காய்ச்சி ஆணியில் கட்டிவர குணமாகும். வல்லாரை இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி கட்டிவர மாறும்.
6. இடுப்பு வலிக்கு :
தான்றிகாய் 10 கிராம், கடுக்காய் 10 கிராம், ஏலக்காய் 10 கிராம், நெல்லி வத்தல் 10 கிராம், லவங்கபட்டை 10 கிராம், திப்பிலி 10 கிராம் யாவற்றையும் இடித்து சூரணமாக்கி காலை மாலை 1 டீஸ்பூன் தேனுடன் சாப்பிட வலி போகும். ஆவாரை இலை, கருப்பு உளுந்து இரண்டையும் பொடி பண்ணி சூடாக்கி ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலிபோகும்.
7. கால் ஆணிக்கு :
பூவரசம் பழுப்பு இலையை அரைத்து ஆணியில் கட்டி வர குணமாகும்.
8. வாதத்திற்கு லேகியம் :
பூண்டு 50 கிராம், அக்கிரகாரம் 5 கிராம், ஓமம் 5 கிராம், சீரகம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், யாவற்றையும் பொடியாக்கி காலை, மாலை உணவுக்கு பின் வேளைக்கு 1 டீஸ்பூன் பாலுடன் நெய்யும் சேர்த்து சாப்பிட வாதம் தீரும்.
9. நரம்பு தளர்ச்சிக்கு :
அமுக்கரா சூரணம் 50 கிராம், நீர்முள்ளி விரை 50 கிராம், இரண்டையும் வறுத்து சேர்த்து அரைத்து 1 டீஸ்பூன் அளவு பாலுடன் உணவுக்கு பின்பு சாப்பிட நரம்பு தளர்ச்சி போகும்.

மருத்துவ உதவிக்கு போன் மூலம் தொடர்பு கொள்னலாம். ரூ.150/- ங.ஞ செய்து செலவில்லா சித்த மருத்துவ புக்கை கொரியர் மூலம் பெற்று கொள்ளலாம்.