செலவில்லா சித்த மருத்துவம்!

 

$11.       நிலவேம்பு;

  1.          இதை சிறியா நங்கை என்று நம் ஊர் மக்கள் கூறுவார்கள். தோட்டக் காடுகளிலும் ஊர் வெளி இடங்களிலும் சிறு செடியாக முளைக்கும். மிளகாய் செடி போன்ற தோற்றத்தில் இருக்கும். மிகுந்த கசப்புத் தன்மை உடையது. எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி போட வாத நோய் குணமாகும். விஷக்காய்ச்சல் உட்பட சகல வித காய்ச்சலுக்கும் கசாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும். விஷக்கடிகளுக்கும் அரைத்து பாக்களவு காலை – மாலை பாலுடன் கொடுக்க சுகம் ஆகும். புத்தி தெளிவில்லாதவர்களுக்கு பாலுடனும் கொடுத்துவர தெளிவு கிடைக்கும்.

$12.  நில வாகை;

  1.           இது சிறு செடியாக நம் ஊர் வெட்டைவெளியில் தரையுடன் படர்ந்து கிடக்கும். இதை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வென்னீரில் சேர்த்து குடித்து வர மலச்சிக்கல் தீரும். வாயு வெளியேறும்.

$13.   ஆடாதொடை;

  1.              வேலிக்காகவும், மருந்துக்காகவும் அனேகர் வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பார்கள். இதை ஆடு, மாடு எதுவும் தின்னாது. இதை இலைச் சாற்றை கசாயம் செய்து இத்துடன் சித்தரத்தை பொடியும், தேனும் சேர்த்து கொடுக்க இருமல், இளைப்பு, சளி தீரும். இந்த இலைகளை பொடியாக நறுக்கி ஒரு பேப்பரில் சுத்தி தீயிட்டு பீடி மாதிரி வலிக்க ஆஸ்துமா தீரும்.

$14.  பிரண்டை;

  1.         இது வேலிகளில் கொடியாக படர்ந்து கிடக்கும். இதை எடுத்து நார்களை நீக்கி நன்கு கழுவி சிறிது மிளகு, உப்பு, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட இரத்தமூலம், ஆசனவலி ஒழியும். முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் தன்மை உடையது. பசி உண்டாகும். பிரண்டை பஸ்பம் ரத்தபேதி, சீதை பேதி, வயிற்றுபோக்கு முதலியவற்றை குணமாக்கும். இதை தீயிட்டு வதக்கி பிழிந்து சார் எடுத்து ½ சங்களவு குழந்தைகளுக்கு கொடுக்க மார்பு சளி தீரும்.

$15.  மஞ்சள் கரிசலாங்கண்ணி;

         இதை மஞ்சள் கரிசாலை என்றும் கூறுவர். மஞ்சள் நிற பூக்களுடன் தரிசு நிலங்களில் காணப்படும். இதை பச்சையாக அரைத்து காலை – மாலை கோலி அளவு பாலுடன் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். சாறு எடுத்து எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வர தலை நோய்கள் வராது. கூந்தல் நன்கு வளரும். அயசெந்தூரம், காய்ந்த செந்தூரம் செய்ய இதன் சாறு பயன்படும்.

$16.  இசங்கு;

  1.    இது ஆற்றங்கரை, குளக்கரை ஒரங்களில் மிகுதியாக காணப்படும். இதை அரைத்து பாக்களவு, காலை – மாலை கொடுக்க அரைகடுவன், சிரங்கு, குஷ்டம், சிலவாத நோய்கள், கபம், தவளை சொறி, சர்ப்பவிஷ்ம் எல்லாம் குணமாகும். வேர் தொலி பாலுடன் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும். இதன் பழத்தை சாப்பிட தொண்டை நோய்கள் குணமாகும். (புளி நீக்கவும்).

$17.  சோற்று கத்தாழை அல்லது குமரி;

  1.      இது வேலி ஓரங்களிலும், சில காட்டு ஓடை பகுதிகளிலும் மிகுதியாக காணப்படும். இது வறட்ச்சியான காலத்திலும் வாடாமல் இருப்பதால் இதற்கு குமரி என்ற பெயரும் உண்டு. இதில் உள்ள வெண்மையான சோறு போன்ற பாகத்தை எடுத்து ஐந்து, ஆறு தடவை நன்கு கழுவி எடுத்து சிறிது உப்பு சேர்த்து மோருடன் பிசைந்து சாப்பிட நீர்கடுப்பு, ஆசன கடுப்பு, மூல கடுப்பு குணமாகும். இத்துடன் மஞ்சள் பொடி, நீர் சேர்த்து குடிக்க பின் தலைவலி குணமாகும்.

$18.  மாதுளை;

    இதன் பழச்சாற்றை கண்களில் இட்டு வந்தால் கண்களில் நீர் வடிவது நிற்கும். இதன் காய் தொலியை அரைத்து கொடுக்க பெரியவர்கள் , சிறியவர்களுக்கு ஏற்படும் இரத்தபேதி, சீதபேதி, குணமாகும். இதன் சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட புளித்த ஏப்பம் தீரும். இதன் கசாயத்துடன் பால் சேர்த்து சாப்பிட மலச் சிக்கல் தீரும். இதன் காய் பாகத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து நல்லெண்ணெய்யில் வதக்கி மார் பாகங்களில் கட்டி வர மார்பாகங்கள் விம்மி விரைப்பாக காணப்படும்.

$19.  வேம்பு;

  1.    நாட்டு வேம்பு, மல வேம்பு என்ற இரண்டும் வகை உண்டு. இதன் இலைகளை நிழலில் காயவைத்து பொடியாக்கி 1டிஸ்பூன் பொடியுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து சாப்பிட குடல் புழுக்கள் வெளியேறும். இதன் பொடியுடன் மஞ்சள் பொடி சேர்த்து போட்டு வர சிரங்கு புண்கள் ஆறும். இதன் இலைகளை வென்னீரில் போட்டு ஆவி பிடிக்க காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

$110.அருகம்புல்;

  1.     இது தோட்டம், வயல்வெளிகளில் காணப்படும். இதை சாறு எடுத்து காயங்களில் போட்டு வர ஆறும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாரம் இருமுறை இதன் சாற்றை குடித்துவர இரத்த அழுத்தம் மட்டுபடும். இதன் சாறும் அதிமதுரமும் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி போட சொறி, சிரங்கு, ஊரல் தீரும்.

மருத்துவர்: K.P.பால்ராஜ்

S.V.கரைPo. 627856

திருநெல்வேலி மாவட்டம்

Cell: 9487348703