செலவில்லாத சித்த மருத்துவம்

74) நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பாலில் அவித்து, பொடித்து சூரணமாக்கி 1டம்ளர் காய்ச்சிய பாலில் 1 டீஸ்பூன் பொடியும், 1 டீஸ்பூன் தேனும் சேர்த்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
75) உடல் உறவில் பலன் பெற : சிறு நெரிஞ்சி காய்களை பாலில் அவித்து காய வைத்தும், அமுக்கரா கிழங்கை பாலில் வேக வைத்தும் காய வைத்து சூரணமாக்கி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு டீஸ்பூன் பொடியை காய்ச்சிய பாலில் போட்டு தினம் இரவு சாப்பிட்டு வர உடல் உறவில் பலன் கிட்டும்.
76) உடல் சூடு காங்கை குறைய : 1 கிலோ தாமரை பூவை நிழலில் உலர்த்தி ஒரு இரவு முழுவதும் 3 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து, தேன்பதம் வரும் வரை காய்ச்சி 15 மில்லி அளவு எடுத்து ஒரு கிளாசில் தண்ணீர் சேர்த்து பருக உடல் சூடு தணியும்.
77) உடல் பருமன் குறைய : நீர் முள்ளி சமூல சூரணம் 300 கிராமம், நெருஞ்சில் முள், சோம்பு அல்லது பெருஞ்சீரகம், கொத்தமல்லி, வகைக்கு 50 கிராமம் சேர்த்து இவைகளை 2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி 1/2 லிட்டர் ஆனதும் தினம் 125 மில்லி குடித்து வர உடல் பருமன் குறையும்.
78) வயிற்றுப் போக்கிற்கு : வெள்ளை குங்கிலியம் 5 கிராம், மாம்பருப்பு 10 கிராம், இலவம் பிசின் 5 கிராம், ஜாதிக்காய் 10 கிராம் சேர்த்து அரைத்து வேளைக்கு சுண்டக்காய் அளவு தேனுடன் சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.
79) சோரியாஸிஸ் : நீரடி முத்து, கசகசா தேங்காய் துருவல், காட்டு சீரகம், கருஞ்சீரகம், கார் போக அரிசி, பிரமதண்டு விதை இவைகளை சம அளவு எடுத்து புளித்த மோர் விட்டு அரைத்து உடம்பில் பூசி 3 மணி நேரம் கழித்து வென்னீரில் குளித்து வர சோரியாஸிஸ் குணமாகும்.
80) உங்கள் வீட்டு பசுக்கள் பால் சுரக்க : முள்ளுகீரை, கொள்ளு, கடலை சேர்த்து அரைத்து, நீருடன் அல்லது தனியாக பசுவுக்கு ஊட்டி வர நிறைய பால் சுரக்கும்.
81) குடல் கிருமிகள் சாக : பேய்த்துளசி அல்லது காஞ்சாங்கோரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்தால் குடல் புழுக்கள் மடிந்து போகும். இதை சொரி, சிறங்கிற்கும் தேய்த்தும் குளிக்கலாம்.
82) குழந்தைகளுக்கு வயிற்று போக்கு டானிக் ஜாதிக்காய் ஒன்று, கசகசா 10 கிராம் எடுத்து இரண்டையும் சேர்த்து அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி, நெய், தேன் சேர்த்து கொடுக்க வயிற்றுப் போக்கு மாறி குழந்தைகள் நலன் பெறும்.
83) முடி உதிர்வதை தடுக்க : நெல்லிக்காய் பவுடர், வெந்தய பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து தேய்த்து குளிக்க முடி உதிர்வது நின்று விடும்.
84) முகத்தில் உள்ள கரும்புள்ளி போக : சந்தனம், முள்ளு முருங்கை இலை, பாசிப் பயறு, உப்பு இவைகளை சேர்த்து அரைத்து முகத்தில்பூசி 2 மணி நேரத்திற்கு பின்பு வென்னீரில் கழுவவும், சில தினங்களில் கரும்புள்ளி மாறி விடும்.
85) காக்காய் வலிப்பு தீர : வசம்பு, பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல், அதிவிடயம், கருப்பு உப்பு இவைகளை சம அளவு எடுத்து பொடி பண்ணி 1 டீஸ் பூன் அளவு காலை, மாலை, இரவு தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
86) மர்ம உறுப்பு ஊரலுக்கு : மருதோன்றி இலையும், எலுமிச்சை பழச்சாறும் சேர்த்து அரைத்து போட்டு வர ஊரல் குணமாகும்.
87) ஆண்மை சக்தி பெற : நெருஞ்சில் விதையையும் பூனைக்காலி பருப்பையும், பசும் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து பசும்பாலுடன் தினம் இரவு 1 டீஸ்பூன் சாப்பிட்டு வர ஆண்மை கூடும்.
88) வயிறு பொருமல் தீர : பெருங்காயத்தையும், ஓமத்தையும் சமமாக எடுத்து அரைத்து ஆறிய வென்னீரில் கலக்கி குடிக்க வயிறு பொருமல் தீரும்.
89) நஞ்சு உண்டவர்களுக்கு 10 கிராம் அளவு கருப்பு மொச்சையை அரைத்து 2,3 கிளாஸ் தண்ணீரில் கலக்கி கொடுக்க, வாந்தியாகி விஷம் எல்லாம் வெளியேறி விடும். பிறகு விஷம் முறிவுக்கு கோழிமுட்டை வெண்கருவை கொடுக்கலாம்.
அன்பான வாசக நண்பர்களே! உங்களுக்கு தேவையான மருத்துவ சந்தேகங்களை போன்மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் எழுதிய செலவில்லா சித்த மருத்துவ நூலை ரூ.100/- ஆடீ செய்து தபாலில் பெற்று கொள்ளலாம்.