உருவாக்கப்படும் உணவுப் பற்றாக்குறை!

  images  எந்த மனிதனும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பிற மனிதனின் அல்லது சமூகத்தின் உதவி பெற்று இணைந்தே வாழ்ந்திட முடியும்!
அதனால்தான் மனிதனை “சமூக விலங்கு” என்கிறோம், இதையே இப்படி மாற்றி யோசிக்கலாம் அதாவது எந்த மனிதனும் தனித்து வாழ இயலாது என்பதாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிற மனிதனின் உதவி தேவை என்பதாலும் “நான்” மற்றவர்களுக்கு உதவ வேண்டும், மற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று யோசிக்கிற மனப்பாங்கும், எண்ணங்களும் மனித சமூகத்தில் மறைந்து வருகிறது. இதனால் ஒரு பக்கம் அபரிமிதமாக வளர்ச்சியும் மறுபக்கம் பசியும், பட்டினியும் என சமன்பாடற்ற நிலை நிலவுகிறது கடந்த மாதம் 16 ஆம் நாள் “உலக உணவு தினம்” கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோஷம் பிரச்சாரம் செய்யப்படும். இந்த ஆண்டு “உலகுக்கு உணவு வழங்குவோம் பூமியைக் குறித்து அக்கரை கொள்வோம்” என்ற கோஷம் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று உலகில் 24 நாடுகளில் 732 கோடி மக்கள் வசிக்கின்றனர். இம்மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா? எனும் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்!
“அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது” என்று முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்.
பசி என்பது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. எளிய அடுத்த வீட்டுக்காரன் எம்மதம், எந்நாடு, எம்மொழி என்று பாராமல் அவனுடைய தேவைக்கு உணவளிப்பது கடமையாகும். ஒரு வீட்டுக்காரன் அடுத்த வீட்டுக்காரனையும், ஒரு ஊரிலிருப்போர் அடுத்த ஊரிலிருப்போரையும், ஒரு மாநிலத்தார் இன்னொரு மாநிலத்தாரையும், ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டினரையும் கவனிக்க வேண்டும் என்பதையே மேற்கண்ட நபிகளாரின் கூற்று உணர்த்துகிறது.
நபி யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது. நபி யூசுஃப் (அலை) அவர்கள் அந்த நாட்டின் மன்னனுக்கு கூறிய ஆலோசனை அடிப்படையில் பஞ்சம் ஏற்படும் என்பதை முன்பே கண்டறிந்தது மட்டுமின்றி அதற்கு நிவாரணமாக முன் கூட்டியே உணவு தானியங்களை சேகரித்து வைக்கவும், தமது நாட்டினருக்கு மட்டுமின்றி அண்டை நாட்டினருக்கும் உணவை பகிர்ந்து வழங்கியதாக குர்ஆன் குறிப்பிடுகிறது. (பார்க்க அல் குர்ஆன் சூரா யூசுஃப் 12 : 59 - 88) இந்த முன்மாதிரி இன்றைய உலகுக்கு தேவைப்படுகிறது!
   இன்று உலகமயமாக்கல், உலக வங்கி, உலகப் பொருளாதாரம் என்றெல்லாம் உச்சரிக்கும் வார்த்தைகள், உலகப் பணக்காரர்களுக்கும் அல்லது சட்டாம் பிள்ளைத்தனம் செய்யும் நாடுகளுக்கு மட்டுமே பயன்படுகிறது, ஏழைகளுக்கும், எளிய நாடுகளுக்கும் இதனால் என்ன பயன் கிடைத்தது. ஐரோப்பிய நாடுகளில் விரையமாக்கப்படும் உணவுகள் மட்டுமே ஆஃப்ரிக்க நாடுகளுக்குப் போதுமானது என்கிறது ஒரு புள்ளி விவரம். எவ்வளவு உணவுகள் வீணாக்கப்படுகிறது பாருங்கள்!
ஏழை நாடான இந்தியாவில் பாதுகாக்க முடியாமல், பதப்படுத்த முடியாமல் வீணாகும் உணவுப் பொருட்கள் மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடியாம் இது மத்திய உணவு பதப்படுத்துதல் துறை வெளியிட்டுள்ள செய்தி. (தி இந்து) உலகில் 84 கோடி மக்கள் தினமும் பசியால் வாடுகின்றனர் என்கிறது ஐ.நா வின் அறிக்கை. “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்கிறான் பாரதி. அப்படிப் பார்த்தால் நாம் 84 கோடி ஜெகத்தை (உலகை) அழிக்க வேண்டியிருக்கும் இல்லையா?
உணவு உற்பத்திக்கு பூமியில் இல்லையா?
   மனிதனுக்குத் தேவையானதை இந்த பூமி தர வல்லது. ஆனால் மனிதனின் பேராசைக்கு இந்த பூமியால் ஈடுகொடுக்க முடியாது. என்று சொன்னார் காந்தி. மனித சமூகத்துக்குத் தேவையானவை இந்த பூமியில் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் அந்த ஆற்றலை பூமிக்கும்; அதை உற்பத்தி செய்கின்ற ஆற்றலை மனிதனுக்கும் தந்துள்ளான். ஆனால் இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது யார் பொறுப்பு?
அறிவுத் திறனும், உடல் வலிமையும் கொண்ட 15 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் உலகில் 7.5 கோடிப்பேர் இருக்கிறார்கள். இவர்களை நம்பியுள்ள குடும்பத்தின் நிலை என்ன? மதிப்பு மிக்க இந்த மனித வளம் எந்தப் பயனுமின்றி வீணாக்கப்படுகிறது.
பசி, பஞ்சம், பட்டினி என்பது தலை விதியல்ல! உழைப்பின் மூலம் அவற்றை நாம் மாற்றிட இயலும். “காலையில் வெறும் வயிற்றுடன் பறந்து செல்லும் பறவைகள் மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன.” என்ற நபிகளாரின் சொல் நம்பிக்கைக்கு மட்டுமல்ல உழைப்புக்கும் சேர்த்தே கூறப்படும் உவமையாகும். “(ஜும்ஆ) தொழுகை முடிவுற்றால் (பள்ளியிலிருந்து புறப்பட்டு) பூமியில் பறவிச் சென்று அல்லாஹ்வின் அருளை தேடிக் கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்” என்ற வசனம் உலகுக்கு சிறந்த வழிகாட்டலாகும். தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் வழிகாட்டும் வசனம் இது.
வழிபாடு, உழைப்பு அதன் மூலம் வெற்றி என்பது வெற்றி பெறுவதற்கான வழிமுறையாகும் என்று இவ்வசனம் வழி காட்டுகிறது. தனிமனிதனுக்கு சமூகமும், சமுக்கத்திற்கு நாடும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.
ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எந்தத் திட்டமும் தீட்டாமல் அரசே தனது இயலாமையை மூடி மறைக்க மக்கள் தொகை பெருக்கம் அதனால் உணவுப் பற்றாக் குறை என்ற பல்லவியை திரும்பத் திரும்ப இன்று வரை பாடிக் கொண்டிருக்கிறது இந்த அரசுகள்.
உண்மை நிலை என்ன?
    இந்த பூமியில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தேவையான உண்வை உற்பத்தி செய்து கொள்ளமுடியும் எனும் நிலையில்தான் இந்த பூமியும் குறிப்பாக விவசாய நிலங்களும் இருக்கிறது. இந்தக் கணக்கீட்டை உற்ற மக்கள் தொகை கணக்கீடு என்பார்கள். நாம் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். சின்னஞ்சிறு தீவான இலங்கையில் மட்டுமே உலகிலுள்ள 700 கோடி மக்களையும் ஒரு சிறிய இடைவெளியில் வரிசையாக நிறுத்தி விட முடியும் என்கிறார்கள். ஆனால் இதே மக்கள் தொகையினர் பூமியின் நாளில் ஒரு பங்காக இருக்கும் கரையில் (தரையில்) வசித்து வருகின்றனர். பரந்து விரிந்த இந்த பூமி இறைவனின் மாபெரும் அருட் கொடையாகும். எனவே நாம் உருவாக்க வேண்டியது உணவைத்தான் பற்றாக்குறையை அல்ல! சிந்திப்போம்!