விண்ட் எனர்ஜி

energe

எதிர்காலம் காற்றிடம்தான் உள்ளது. விண்ட் எனர்ஜிஎன்கிற காற்று மின்னாற்றல் தயாரிப்பு என்பதே எதிர்கால மின் தேவைகளை கணிசமாக

நிறைவு செய்யும்.

எனவே மின்னாற்றல் பெற காற்றையும், சூரியனையும் நாம் அதிகளவு பயன்படுத்திட வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை குறிப்பாக மாணவச் சமூகம் உணர வேண்டும். அதற்கேற்றவாறு தொழிலகத்தில் கருவிகளை உற்பத்தி செய்வதற்கு எந்தளவு முனைப்பு காட்டுகிறோமோ அந்தளவு முனைப்பைக் காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறும் தொழில் மீதும் காட்ட வேண்டும்.

பி.இ. பொறியியல் படித்தவர்கள் வெவ்வேறு வேலைகளில் ஈடுபடுவதைவிட

இதுபோன்ற எதிர்காலம், நிகழ்காலத்திற்கு பயனுள்ளவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன்எலக்ட்ரோடெக்னிக், என்விரோன்மெண்டல், இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி முதலான பொறியியல் படித்தவர்க

ளால் இத்துறையில் சாதிக்க இயலும். சுயதொழிலாகவே இதனைச் செய்ய

முடியும். காற்றாலை வாயிலாக எடுக்கப்படும் மின்சாரத்தை சொந்த உபயோகம்,

தொழிற்சாலை, நகராட்சிகள், ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்து பொருளீட்டலாம்.

பொறியியல் படித்த நம் இளைஞர்கள் முயன்றால் நம் சொந்த சிந்தனையில் மலிவாக, தரமாக, எளிய முறையிலான வடிவமைப்பைக் காணமுடியும். இதனால், காணி நிலமுள்ள விவசாயிகளும் காற்று வீசும் தங்கள் நிலத்தில் இதனை நிறுவி விளைச்சலோடு மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஒவ்வொரு விவசாய குடும்பமும் தன்னிறைவு அடையும். வீடுகளின் மொட்டைமாடியில் தற்போது அமைந்துள்ள செல்போன் டவர் போலவே காற்று அதிகம் வீசும் கடற்கரையோரப் பகுதிகளில் சிறிய அளவுள்ள காற்றாலையை நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்க வேண்டும். இந்தக் கடமை இளைஞர்களுக்கு உள்ளது.

தற்போது காற்றாலை சுழல 15 கி.மீ. வேகமுள்ள காற்று தேவையுள்ளது. இது நம் தென் மாவட்டத்தில் குறிப்பாக நெல்லை, குமரி, ராமநாதபுரம் முதலிய கரையோரப் பகுதிகளில் 15-45 கி.மீ. வேகமுள்ள காற்று வீசும் பகுதிகள் நிறைய உண்டு. ஆனால் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறிய அளவி

லான காற்றாலை அமைக்கப்பட்டால் 6கி.மீ

வேகமுள்ள காற்றிலும் விசிறிகள் சுழலும்.

உலகின் பிற பகுதி மக்களைவிட நம் பெற்றோர்கள் தமிழகத்தில் திருவிழாக்

காலங்களில் சுழலும் விசிறி பொம்மையை நமக்கு வாங்கித் தந்தார்கள். அதைக் கையில் பிடித்தபடி சுழலவேண்டி காற்றின் திசை நோக்கி சிறுவர்கள் ஓடிச் செல்வது அலாதியான அழகாகும். எனவே காற்றாலை என்கிற நுட்பத்தை நம் முன்னோர் நம் மனதில் ஏற்கனவே விதைத்துள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிய இடத்திலும், திறனுள்ள காற்றாலை எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் தெளிவாக அமையுமேயானால் அரசினரும் அதற்கேற்ப தங்கள் விதிகளை மாற்றி தேவையான உதவிகளைச் செய்திட முன்வருவார்கள்.

WIND ENERGY  குறித்த பயிற்சி மற்றும் RENEWABLE ENERGY SOURCES என்ற பாடம் நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் பல பல்கலைக்கழங்களிலும் கற்றுத் தரப்படுகிறது. ஆர்வமுள்ள பலதுறை மாணவர்களுக்கு சென்னையில் அமைந்துள்ள CENTRE FOR WIND ENERGY  TECHNOLOGYஎன்ற அமைப்பு கற்றுத் தருகிறது.

மேலும் விபரங்களுக்கு WWW.CWet.tn.nic.in என்ற இணைய முகவரியை தொடர்புகொள்ளவும்.