இன்டிக்ரல் பல்கலையில் பார்மசி படிப்பு

   lab23லக்னோவில் உள்ள இன்டிக்ரல் பல்கலைக்கழகத்தில் பி.பார்ம், எம்.பார்ம் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
4 வருட பி.பார்மசி, 3 வருட பி.பார்மசி(லேட்ரல் என்ட்ரி), 2 வருட எம்.பார்மசி
தகுதி:
பி.பார்ம்: +2வில் (இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், உயிரியல், பயோ-டெக்னாலஜி) ஆகிய பாடப்பிரிவுகளுடன் ஏதாவதொன்றில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.பார்ம் (லேட்ரல் என்ட்ரி): டி.பார்ம் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.பார்ம்: பி.பார்ம் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை integraluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனுடன் ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தால் நடத்தும் (IUET-2015) நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கூடுதல் தகவல்களுக்கு www.integraluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.