சோலார் எனர்ஜி

TamilDailyNews 9145275354386
மின்சாரம் இல்லாத வாழ்க்கை இன்றைய சூழலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு நாட்டின் மாநிலத்தின் வளர்ச்சி அதன் மின்சாரத்தை சார்ந்தே உள்ளது. இப்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட தேவை அதிகமாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில், மற்றும் தொழில் நுட்ப உற்பத்தி சார்ந்த தேவைகளால் மின்சாரத்தின் தேவை உலகளவில் பெரும் பற்றாக்குறையை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் மனித சமுதாயம் இதுவரை பார்த்திராத மின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அதைத் தவிர்க்க மின்சாரத்தை தயாரிப்பதற்கு மாற்று வழிமுறைகளை எல்லா நாடுகளும் கண்டறிந்து வருகிறது.
சோலார் எனர்ஜி.
ஐரோப்பா கண்டத்தை விட வருடத்தில் குறைந்தது 300 நாட்கள் வெயிலின் அறிமுகத்தை நாம் பலவிதங்களில் அனுபவித்தே வருகிறோம். அள்ள அள்ள குறையாத அதிசய நீரூற்று போல வெயிலும் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பெரும் கொடை என்றே சொல்லலாம்.
நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை பற்றாக்குறை நிலைக்கு செல்ல இருப்பதாலும், சுற்றுச் சுழலுக்கு கேடு விளைவிப்பதாலும் இவைகளுக்கான மாற்றை உலகம் தேடி வருகிறது. அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் சற்றே பிரபலமடைந்து வருகிறது.
நமது தேவையை இயற்கை வளங்கள் மூலம் பூர்த்தி செய்யும் வாய்ப்பு இது. கொஞ்சம் கவனம் செலுத்தினால் நமது தேவையும் தீரும் தேவையில்லாத சர்ச்சைகளும் ஓயும். உயிர்களுக்கும் உலகத்திற்கும் ஆபத்தாக இருக்கும் அணுஉலை மின்சாரம். சூழலை கெடுக்கும் அனல் மின்சாரம் போன்ற அபாயத்திலிருந்து விலகி சுற்றுச் சூழலை கெடுக்காத மாற்று ஏற்படாக
சூரிய ஒளி மின்சாரம் இருக்கிறது.
இனி மின்சாரத்திற்காக மின்சார வாரியத்தை கெஞ்ச வேண்டிய அவசியமில்லாமல் போகலாம். மின்சார கட்டனத்தை எண்ணி உள்ளம் படபடப்பது நின்று போகும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் நமக்கு நாமே மின்சாரம் தயாரித்துக் கொள்ளும் இலகுவான வழிமுறைகளும் சோலார் மின்சாரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளத்தில் உள்ள கொச்சி விமான நிலையம் உலகிலேயே முதன் முதலில் முழுவதும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய வகையில் 45 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மின் உற்பத்தி 12 மெகா வாட். மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் நிறைய வந்துவிட்டது. மொபைல் சார்ஜர், கீ போர்டு, புளுடூத் ஸ்பீக்கர் என பட்டியல் ஏராளமாக உள்ளது.
சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனி அந்நாட்டின் 6.2% மின்சார தேவையை சூரிய மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது. சூரிய சக்தியை சேமித்து வைக்கும் தகடுகள் மற்றும் சோலார் செல்களை உற்பத்தில் செய்வதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.
பிரான்ஸ், போர்ச்சுக்கல், இத்தாலி, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் முழு மூச்சாக திட்டமிட்டு வருகின்றன. சூரிய ஒளியை பெற்று சோலார் செல்வழியில் அதனை மின்கலத்தில் சேமித்துப் பயன்படுத்தலாம். சூரிய ஒளி மறைவுக்குப்பின் அது மின்சாரத்தை உமிழும் கலமாகவும்
மாற்றலாம். ஆக இதுபோன்ற தொழில் நுட்பங்களை மேலும் பன்மடங்கு ஆழமாக பி.இ பொறியியல் பயின்ற மாணவர்கள், இளைஞர்கள் முயன்றால் இதில் புதிய, எளிய வழிமுறைகளையும் கண்டறியலாம்.
குறிப்பாக பொறியியலில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் சுற்றுச்சூழல் பொறியியல், பவர் என்ஜினியரிங் முதலான தொடர்புள்ள துறைகளைப் பயின்றவர்கள். சூரிய ஒளி தொடர்பான மின் உற்பத்தியில் அதற்கான கருவிகளில் மாற்றம் கண்டுள்ள நவீன, எளிய கருவிகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
ஏற்கனவே நம் நாட்டில் இதற்கான சாதனங்கள் தயாரிப்பும், உற்பத்தியும், விற்பனையும் நடந்துவருகிறது. இவைகளைக் கண்டு ஆய்ந்து மேலும் புதிய புதிய உத்திகளை பயன்படுத்தி அவைகள் சாமானியர்களும் வாங்கி வீட்டு உபயோகப் பொருட்களைப் போல் பயன்படுத்திட தயாரித்து வழங்க இளைஞர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இவைகளை தனியாக செய்வதைவிட பொறியியல் படித்த இளைஞர்கள் கூட்டு
முயற்சியாக இணைந்து மேற்கொண்டால் சிறந்தது.
சோலார் எனர்ஜி குறிப்புகளை National Institute of Solar Energy வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு : http://nise.res.in/
தமிழ்நாட்டில் TAMILNADU ADVANCE TECHNICAL TRAINING INSTITUTE இந்தப் படிப்பை வழங்குகிறது . http://solarenergyinstitute.in/
Address : No.42/25, GEE GEE Complex,IInd Floor,(Indian Bank Upstairs),Anna Salai, Chennai-600 002(Opp. Anna Salai HPO, Between Shanthi &Anna Theatre) Phone: 091 044 28527579/ 28414736. Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
SOLAR ENERGY DIPLOMA COURSE - தகுதி 8வது தேர்ச்சி போதுமானது.
கற்றுத் தரும் இடம் : NATIONAL OPEN SCHOOL - NEW DELHI, HYDERABAD, KOLKATA
மேலும் விபரங்களுக்கு : Website : www.bios.ac.in / www.mnes.bic.in / www.cwet.tn.nic.in