இணையதள பாதுகாவலர்கள்

Cyber-crime 1
உலகில் தொழில் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பெரும் மாற்றங்களைத் தொடர்ந்து இப்போது தொழில் நுட்ப புரட்சி. உலகத்தின் போக்கில் எங்கும் வேகம் எதிலும் வேகம். நினைத்த நேரத்தில் நினைத்த தகவல்களை, பணத்தை, கோப்புகளை உலகத்தின் எந்த மூளைக்கும் பரிமாறிக் கொள்ளும் சாத்தியம் பெற்றிருக்கிறார்கள் மனிதர்கள்.

கணினியின் வடிவம் சுருங்கச் சுருங்க அதன் பயன்பாடு உலகம் முழுவதும் பெருகத் தொடங்கியது. தகவல் சேகரிப்பு, தொடர்பு என தொடங்கிய நவீனக் கணினியின் வளர்ச்சி ஒரு சொட்டில் (one touch) உலகம் காணும் ஸ்மார்ட் போன் வரை வந்திருக்கிறது.
1950 க்குப் பிறகு உருவாக்கப்பட்ட இணையம் அதுவரை கற்னை செய்திராத அனுபவத்தை மனிதர்களுக்கு வழங்கி வருகிறது. தகவல் தொடர்பு என்பதைத் தாண்டி கம்பெனிகள் மற்றும் வியாபாரத்தை நிர்வகித்தல், ஷாப்பிங் செய்தல், வங்கியின் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறான செயல்பாடுகள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இணையத்தை அதிகளவில் சார்ந்திருக்கும் நாம் இணைய தொழில்நுட்பத்தை பெரிதும் நம்புகிறோம். அதன் பாதுகாப்புத் தன்மையை சார்ந்திருக்கிறோம்.
நவீன உலகில் குற்றச் செயல்களும் நவீனமாகி இருக்கிறது. இணையத்தின் வழியாக நமது கணினிக்குள்ளும், இணையதளங்களுக்குள்ளும் புகுந்து செய்யப்படும் திருட்டு புது வடிவெமெடுத்திருக்கிறது. மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்குகளில் புகுந்து திருடும் திருடர்கள் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறார்கள். ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள், ஆபாசம் போன்ற வக்கிரமமான குற்றங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. ஆனால் 70 % க்கும் மேலானவர்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை.
தங்களுடைய இணையதளங்கள் முடக்கப்படுவதால் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல பெரும் ராணுவங்கள், வல்லரசு நாடுகளும் ஸ்தம்பித்துப் போயிருக்கிறார்கள். இதை செய்பவர்கள் ஹேக்கர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்று தொழில்நுட்ப உலகை மிரட்டும் ஒரு சொல் ‘ஹேக்கிங்’.
இணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு கணினியில் புகுந்து விளையாடும் ஓரு சமூகத்தில் கூடிவாழும் நமக்கு அதை தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. ஆனால் பெருகி வரும் "சைபர்' குற்றங்களை தடுக்கும் வல்லுநர்கள் குறைவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட வல்லுனர்களை உருவாக்கும் படிப்புதான் Internet Security என்று அறியப்படுகிற ‘எத்திக்கல் ஹேக்கிங்’(ethical hacking).
Ethical Hacker பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்பதற்கு முன்பாகவே, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் ஆராய்ந்து பாதுகாப்பதாகும். மேலும், ஒரு நிறுவனத்தின் கணினி மூலமான செயல்பாட்டு அமைப்பில், எதிரிகள், எந்த சேதாரமும் ஏற்படுத்தி விடாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுமாகும்.

இணையதள பாதுகாப்புக் குறித்த சிறப்பு படிப்பை மேற்கொள்ளும் முன்பாக, குறைந்தபட்சம் கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில், பி.டெக்., அல்லது பிஎஸ்.சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த அடிப்படை கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே Ethical Hacker ஆக முடியும்.
இவர்களுக்கு பணி வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இணையதளத் திருட்டை கட்டுப்படுத்தும் வல்லுனர்கள் அதிகம் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
எங்கே படிக்கலாம்?
சான்றிதழ் படிப்பு
Ethical Hacking -ல் இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி., படிப்பு சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக்., படிப்பு
நுழைவுத் தேர்வுகள்
இன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் GATE (Graduate Aptitude Test in Engineering) எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதேசமயம், சில கல்வி நிறுவனங்கள், இத்தகையப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு, தங்களின் சொந்த நுழைவுத் தேர்வுகளையும் நடத்துகின்றன.

Indian School Of Ethical Hacking
Kolkata, West Bengal Phone : 094342 43285, www.isoeh.com
..
Arizona InfotechWebsiteDirections
Pune, Maharashtra Phone:093700 01100, www.arizonainfotech.com
National Institute of Electronics and Information Technology
Kattangal, Kerala 673601, Phone : 0495 228 7266, http://calicut.nielit.gov.in/
SRM பல்கலைக்கழகம், தமிழ்நாடு