ஹதீஸின் வகைகள்

Islamic Wallpaper Quran 004-1366x768
ஹதீஸில் பல வகைகள் உண்டு. அவைகளாவன
1. தஃகீது ஆயாத்தில் குர்ஆன. (குர்ஆனின் வசனங்களை உறுதிபடுத்தக்கூடிய ஹதீஸ்கள்)
குர்ஆனில் சொல்லப்பட்ட கருத்துக்களை அப்படியே உறுதிபடுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள ஹதீஸ்களாகும். இவ்வகை ஹதீஸ்களுக்கு அஸ்ஸ_ன்னதுல் முஅக்கிதஹ் - உறுதி படுத்துகின்ற ஹதீஸ் என்றும் பெயர் உண்டு. உதாரணமாக ! அல்லாஹ் தொழுகையை கடைபிடிப்பது பற்றியும், ஜகாத்தை வழங்கிவருவது பற்றியும் கூறுகின்றான்.
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (அல்குர்ஆன். 02 : 43) மேலும் நோன்பு நோற்பதைப் பற்றி இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; (அல்குர்ஆன். 02 : 187) ஹஜ்ஜைப் பற்றி ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அல்குர்ஆன். 02 : 196) அல்லாஹ்வின் ஐவகை கட்டளைகளை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. அவை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஜகாத்தை வழங்குவதும், ஹஜ் செய்வதும், ரமழானில் நோன்பு நோற்பதுமாகும். (புஹாரி : 08, முஸ்லிம் : 16) இந்த ஹதீஸில் தொழுகையை நிலை நாட்டுதல், ஜகாத்தை வழங்கிவருதல், ஹஜ் செய்தல், நோன்பு நோற்றல் என்ற ஐவகை கடமைகளை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவேதான் இவ்வகை ஹதீஸ_க்கு தஃகீது ஆயாத்தில் குர்ஆன. (குர்ஆனின் வசனங்களை உறுதிபடுத்தக்கூடிய ஹதீஸ்கள்)என்று பெயர் சூட்டப்படுகின்றது.

2. அல்முபய்யினஹ் (தெளிபடுத்தக்கூடிய ஹதீஸ்) ஆகும். குர்ஆனில் அல்லாஹ்வால் பல கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அக்கட்டளைகளை எவ்வாறு செய்ய வேண்டும் எனும் விபரங்கள் இடம் பெற்றிருக்காது. அப்படிபட்ட இறை வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தங்களி சொல், செயல், அங்கீகாரங்களால் விளக்கம் அளித்துள்ளார்கள். இவ்வகை ஹதீஸ்களுக்கே அல்முபய்யினஹ் (தெளிபடுத்தக்கூடிய ஹதீஸ்) என்று சொல்லப்படுகின்றது. உதாரணமாக! தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எப்படி தொழ வேண்டும்? என்ற விபரங்கள் இடம் பெற வில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் எப்படி தொழ வேண்டும். தொழுகையில் என்னென்ன ஓத வேண்டும் என்பத முதற் கொண்டும் அனை விஷயங்களையும் மிகத் தெளிவாக இச்சமுதாயத்திற்கு விளக்கியுள்ளார்கள்.

மாலிக் இப்னு ஹ{வைரிஸ்(ரலி) கூறினார்கள். நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும் என்று கூறினார்கள். (புஹாரி : 628) இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் எப்படி தொழ வேண்டும் என்பதை நபித்தோழர்களுக்கு விளக்கியுள்ளார்கள்.

3. அல்முஸ்தகில்லது பில்ஹதீஸ் (ஹதீஸின் மூலம் மட்டுமே உள்ள சட்டங்கள்)ஆகும்.
அல்முஸ்தகில்லது பில்ஹதீஸ் என்பது குர்ஆனில் அறவே சொல்லப்படாத, ஹதீஸைக் கொண்டு மட்டுமே உள்ள சட்டங்களாகும்.
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன். 7:157)
இவ்வசனத்தின் தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார் என்ற வார்த்தையின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த அதிகாரம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இதற்கு சான்றாக பின் வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
மிக்தாம் பின் மஃதீ கரிப (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நான் வேதத்தையும், அதனுடன் அது போன்றவற்றையும் வழங்கப்பட்டுள்ளேன். அறிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதன் தன் வயிறு நிறம்பிய நிலையில் கட்டிலில் இருந்து கொண்டு இவ்வேதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். அதில் எதனை ஹலாலாக பெற்றுக் கொள்கின்றீர்களோ அதனை ஹலாலாக்குங்கள். அதில் எதை ஹராமாக பெற்றுக் கொள்கின்றீர்களோ அதனை ஹராமாக்குங்கள் என்று கூறுவான். அறிந்து கொள்ளுங்கள் ! நாட்டுக் கழுதை உங்களுக்கு ஹலாலாகாது. கோரைப் பல்லுடைய விலங்கு உங்களுக்கு ஹலாலாகாது…… (அப+தாவ+த் : 3988)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய காலத்திற்குப் பின்னால் உள்ள காலத்தில் நடை பெறும் பல விஷயங்களை முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

1) எந்த தியாகமும் செய்யாமல், சிரமமும் இல்லாமல் சாய்வு நாற்காளிகளில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு, ஹதீஸ்களை மறுக்கக்கூடிய ஒரு கூட்டம் உருவாகுவது பற்றியும்,
2) அக்கூட்டம் வழி தவறிய கூட்டம் என்பது பற்றியும் எச்சரித்துள்ளார்கள்.
3) குர்ஆனில் அறவே சொல்லப்படாத பல சட்டங்களை நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்கு அதிகாரம் பெற்றவர்கள் என்பது பற்றியும்,
4) அதற்கு ஆதாரமாகவே நாட்டுக் கழுதைகள் ஹராம் என்பது பற்றி குர்ஆனில் எவ்வித குறிப்பும் இல்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதனை ஹராம் என்று கூறியுள்ளார்கள். எனவே இந்நபிமொழியின் மூலம் குர்ஆனில் அறவே சொல்லப்படாத சட்டங்கள் ஹதீஸில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் இதற்கு மற்றொரு ஹதீஸையும் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள் பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்? என்று கூறினார்கள். இச்செய்தி பனு அசத் குலத்தைச் சேர்ந்த, உம்மு யஅகூப் எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸஊத்(ரலி) அவர்களிடம் வந்து,ëஇப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊ த்(ரலி),இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்,ë(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!îஎன்று கேட்டதற்கு அவர்கள்,ëநீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அந்தப் பெண், ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி),ëநபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்'என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி,உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்'ë என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி),சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்! என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊ த்(ரலி), என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். (புஹாரி : 4886)
இந்த ஹதீஸின் மூலம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குர்ஆனில் சொல்லப்படாத மார்க்கச் சட்டங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல அதிகாரம் பெற்றவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் இருப்பது போல அந்தஸ்திற்குரியதுதான் என்பதை விளக்கியுள்ளார்கள். எனவே அஹ்லுஸ் ஸ_ன்னஹ் வல்ஜமாஆவின் கொள்கையின் இவ்வகை ஹதீஸ்களும் ஆதாரமேயாகும். (தொடரும்)