மதரஸாக்களின் உண்மை நிலை – பகுதி 2.

  • இக்வான் அமீர்
madrasa1முக்கியமான இதழ் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்யவேண்டி வந்தது.
   இந்தப் பணியுடன், ‘உண்மையில் மதரஸாக்களில் என்னதான் நடக்கிறது?’-என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தேன். தமிழகத்தின் மிக முக்கியமான மதரஸாக்களுக்கு நேரிடையாகச் சென்று அங்கு தங்கி மதரஸா நிர்வாகிகள், மாணவர்கள், அண்டை அயலில் வாழும் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவர வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு அது. அதற்காக முக்கியமான மூன்று மதரஸாக்களைத் தேர்ந்தெடுத்தேன்.
கூடவே அந்த நேரத்தில், ‘குமுதம் ரிப்போர்ட்டர், ‘‘பாக்.தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் நிதிவசூல்’ என்ற தலைப்பில் ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அது சம்பந்தமாக உண்மை நிலையை அறியவும் விரும்பினேன். அதற்காக பல நூறு மைல்கள், மலைப் பகுதிகள், குக்கிராமங்கள், அரசாங்கத்தின் நிர்வாகத்துறை, உளவுத்துறை என்று அலைந்து திரிய வேண்டியிருந்தது.
கடைசியில், உண்மையை அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஊடகங்கள் தங்களின் சமூக பிரஞ்ஞையை, அக்கறையை, ஒழுக்க விழுமியங்களை முற்றாக இழந்து கையறுநிலையாய் நிற்கும் அவலத்தை அறிந்து வேதனைப்படத்தான் முடிந்தது. வெறும் பொய்யும், புனைதலுமாய் அனுதினமும் ஊகங்களாலும், வெறுப்புணர்வுகளாலும், பொய்மையாலும் தோய்த்தெடுக்கப்பட்ட அந்த கருப்பு மை செய்திகள் அரங்கேறி சீரழிக்கும் அப்பாவிகளின் வாழ்க்கை எத்தனை எத்தனை?
என் பயணத்தில் நான் கண்ட உண்மைகளை இனி நீங்களே படியுங்கள் – இக்வான்அமீர்
...
வேலூர் நகரின் சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ‘மஸ்ஜிதே காதர்ஷா’ என்ற பள்ளிவாசல். இதன் இமாமாக 23 ஆண்டுகளாக ஹாபிஸ் முஹம்மது அஸ்கர் பணி புரிந்துவருகிறார். தாய்மொழி உருது. தமிழ் சரளமாக பேச வராது. இவர் பல்வேறு சமூகச் சேவை அமைப்புகளை நடத்தி வருகிறார்.
இந்த சமூகச் சேவை அமைப்பு ஒன்றின் ரசீது ஹோட்டல் ஒன்றில் உளவுத்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ரசீது குமுதம் ரிப்போர்ட்டரிடம் தரப்பட்டு ‘பாக். தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் நிதி வசூல்’ என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரையாக அச்சேற்றப்பட்டது.
குமுதம் ரிப்போர்ட்டரின் செய்தியாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர், ஹாபிஸ் முஹம்மது அஸ்கரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘காகதி நகர்’ ஷம்ஷீத்தீன் தங்கள் பகுதி மஸ்ஜித் மற்றும் மதரஸாவுக்கு நன்கொடை வசூலிக்க அதன் பிரதிநிதியாக அங்கே வந்தார்.
அவர் கொண்டு வந்திருந்த ‘பிரதிநிதி’ என்பதற்கான அத்தாட்சி கடிதத்தின் பின்புறத்தில் டிசம்பர் டிசம்பர் 13, என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கு மேலாக உருதுவில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருந்தது. மொத்த வாசகத்தின் பொருள் இதுதான்: ‘டிசம்பர் 13, ரமளான் பிறை 27, வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு (நன்கொடைக்காக) சந்திக்கவும்’ என்று மீண்டும் வசூலுக்கு வருவதை நினைவூட்டும் வாசகம்தான் அது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய செய்தியாளருக்கு டிசம்பர் 13 என்ற ஆங்கில வாசகங்களைக் கண்டதும் கற்பனை ஊற்றெடுத்திருக்கிறது. அதை பாராளுமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் முடிச்சுப் போட்டிருக்கிறார். பிறகு அந்த குக்கிராமத்து இளைஞரை மிரட்ட அவர் பேந்த பேந்த விழித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
இதையெல்லாம் ஒன்று சேர்த்து கதையாக்கி, கற்பனை நயத்துடன் முகப்புக் கட்டுரையாக்கி வெளியிட்டது குமுதம் ரிப்போர்ட்டர்.
புனித ரமளான் மாதத்தில் கல்விச்சாலைகள் மற்றும் இறையில்லங்களுக்கான நன்கொடைகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. அறச்செயல்களுக்கான கூலி பன்மடங்காக இறைவனிடம் கிடைக்கும் ரமளானில் சிலர் தொடர்ச்சியாக மதரஸாக்கள் எனப்படும் கல்விநிலையங்களுக்கும், மஸ்ஜித் எனப்படும் இறையில்லங்களுக்கும் நன்கொடை வழங்குவது உலகம் முழுவதும் வழக்கம். இந்த நன்கொடைகள் வசூலிப்போருக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைப்பதால் இந்த வருவாய்க்காக சிலர் மெனக்கெட்டு முஸ்லிம் நன்கொடையாளர்களைத் தேடி அலைவதும் உண்டு.
இப்படி பிழைப்பைத் தேடி வந்த அந்த ஆந்திரத்து அப்பாவி இளைஞர் ஒருவர் குமுதம் ரிப்போட்டரால், பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கற்பனை ஏஜெண்டாக மாற்றப்பட்டார். வேலூர் நிதி திரட்டித்தரும் மாவட்டமானது. ஷம்ஷீத்தீன் மஸ்ஜித் கற்பனை என்றும் கதைக்கப்பட்டது.
ஆனால், சித்தூர் மாவட்டத்தின் குக்கிராமம் ‘காகதி’ என்பது உண்மை. 20 முஸ்லிம்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஷம்ஷீத்தீன் மஸ்ஜித் மற்றும் மதரஸா (எல்லாமே ஓலைக் குடிசைகள்தான்) இருந்ததையும் பல்வேறு சாகஸங்களுக்கு மத்தியில் கண்டுப்பிடித்து பதிவும் செய்யப்பட்டது.

அதேபோல, குமுதம் ரிப்போர்ட்டர் தனது கட்டுரையை வளர்க்க, பேரணாம்பட்டிலிருந்து 6 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பகதூர் பள்ளி’ கிராமத்தில் அமைந்துள்ள அநாதை ஏழைப் பிள்ளைகளுக்கான ‘மதரஸா குதாதை’ மர்ம நபர்களின் அடைக்கலப் பகுதியாக சித்தரித்தது.
தமிழகம், ஆந்திர மாநில வி,கோட்டா பிரதானச் சாலையில் உள்ள ‘மதரஸா குதாதாத்’ பக்கத்திலேயே வனத்துறையினரின் காவல்சாவடி (‘செக் போஸ்ட்) ஒன்றும் உள்ளது. அப்படி இருந்தும் அங்கு தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குமுதம் ரிப்போர்ட்டர் பொய்ச் செய்தி வெளியிட்டிருந்தது.
அநாதைப் பிள்ளைகளுக்கான மதரஸாவுக்கு எதிரில் ஒரு பெரிய மாந்தோப்பு உள்ளது. அங்கு வார விடுமுறை நாட்களில் பேரணாம்பட்டிலிருந்து சிலர் சீட்டாட வருவது வழக்கம். அவர்கள் கையில் கட்டுச்சோற்றுடன் வந்து அங்கேயே மாலைவரை தங்கிச் செல்வது வழக்கம். இந்த சூதாட்டக்காரர்கள்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.
மதரஸாவின் வளாகத்தில், அரசாங்கத்தின் ‘கிராமந்தோறும் தொலைபேசி’ திட்டத்துக்கான தொலைபேசி கோபுரத்தை தீவிரவாதிகளின் தகவல் தொடர்பு சாதனமாக நாக்கூசாமல் பொய்யாக்கி குமுதம் ரிப்போர்ட்டர் எழுதியிருந்தது.
இதைத்தொடர்ந்து ஊர் மக்கள், காவல்சாவடி அதிகாரிகள், மதரஸா நிர்வாகிகள், மாணவர்கள், அண்டை, அயலார் என்று பலரைச் சந்தித்து தீவிரவாதிகள் குறித்து விசாரித்த போது குமுதம் ரிப்போர்ட்டரின் எந்த தகவலும் உண்மை இல்லை என்றும் தெரிந்தது.
கடைசியாக வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்டத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடந்தது. குமுதம் ரிப்போர்ட்டரின் நகல்களைக் காட்டியதும், அவர்கள் போனில் தொடர்பு கொண்டு உளவுத்துறையின் அதிகாரிகளை அழைத்தனர். அங்கு வந்த உளவுத்துறை அதிகாரிகள், அவர்கள் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில் குமுதம் ரிப்போட்டரின் தகவல்கள் பொய்