தமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் தரவுகளின்படி 1960 தொடங்கி 1980 வரையிலான காலத்தில் அரசு வேலைக்கு வந்தவர்களின் சாதிப் பின்னணி அடியோடு மாறியிருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசு வேலைகளைப் பெற்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனச் சாதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்ந்ததால் அதிகாரவர்க்கக் கட்டமைப்பே அடியோடு மாற்றம் கண்டது.
மக்கள்தொகையில் குறைவாக இருந்தாலும், அதற்குப் பொருத்தமில்லாத வகையில் அபரிமிதமாக அரசு வேலைகளைப் பிராமணர்கள் ஆக்கிரமித்திருந்த நிலை சீராக்கப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகளில், முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்தது. அத்துடன் அரசு வேலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, அதுவரை அரசு வேலைக்கே வந்திராத பல சாதியினர் வேலைகளைப் பெற்றனர். இது அரசின் நிர்வாகத்தில் பன்மைத்துவத்தை வலுப்படுத்தியது. இது மிகமிக முக்கியமான மாற்றம்.
எஸ்.நாராயணன் எழுதிய புதிய நூல் ‘தி திரவிடியன் இயர்ஸ்:
பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு