ரோஹிங்கியாவின் பாதையில் பயணிக்கிறதா இந்தியா!

இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளிலும் மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்படும் (செப்டம்பர் 2017) வன்முறைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அடிக்கடி கொடூரமான முறையில் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது நடத்தப்பட்ட வன்முறை அரக்கன் ரோஹிங்யா சால்வேஷன் என்ற அமைப்புக்கு எதிராகவே இந்த நடவடிக்கை என்று கூறி பர்மா இராணுவமும், போலீசாரும் முஸ்லிம்கள் மீது வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.
(இது வன்முறை அல்ல இன அழிப்பு)
பரவலாக நடக்கும் வன்முறை மனித குலத்துக்கு எதிரான குற்றம் என ஐ.நா. சபை தனது அறிக்கையில் தெரிவிவிக்கின்றது.
ரோஹிங்கியா சமூகத்தினர் தொடர்ந்து மத துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவது துயரமான செய்தியாகும் என்று கூறிய போப் பிரான்சிஸ் ஒரு இனக்குழு உறுப்பினர்கள் மற்ற இனக் குழுக்களுக்கு முழு உரிமைகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மியான்மரின் ராகின் மாகாண முஸ்லிம்களின் மீது நகழ்த்தப்படும் அடக்குமுறை கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்த்தப்படும் மெதுவான இனப்படுகொலை, இன அழிப்பு ஆகும்.
இந்தியாவில் பல நகரங்களில் இந்த அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென இந்து வலதுசாரிகள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரதானமாக மியான்மரின் ராகின் மாகாணத்தில் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் என மியான்மர் அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அவர்களின் வரலாறு மியான்மரில் மிகவும் பழையது. இந்தியாவின் ஒரு பகுதியாக மியான்மர் இருந்தபோது, ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் மியான்மரில் உள்ளனர். குறிப்பாக ராகின் மாகாணத்தில் ஒரு முஸ்லீம் ஆட்சியாளர் இருந்தார், அதன் காரணமாக பல முஸ்லிம்கள் அங்கே குடியேறினர்.

மியானமர் இராணுவச் சர்வாதிகாரத்திற்கு வந்த பின்னர், அவர்களின் குடியுரிமை உரிமைகள் மறுக்கப்பட்டு, 1982 சட்டத்திற்குப் பின்னர், குறிப்பாக அவர்களின் குடியுரிமை அங்கீகரிக்கப்படாத, அடக்குமுறை மற்றும் அட்டூழியங்களுக்கு இலக்காக ஆக்கப்பட்டனர். ஆரம்ப கட்டத்தில் பல தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர அமைச்சரவை மட்டத்தில் இருந்த போதும் கூட இந்த வன்முறைக்கு முடிவில்லாமல் இருந்தது.

வகுப்புவாதத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற பல்வேறு தெற்காசிய நாடுகளில் உள்ளன. அங்கே மத சிறுபான்மையினர் துன்புறுத்துதலுக்கு உட்பட்டுள்ளார்கள். மியான்மரின் இராணுவச் சர்வாதிகாரத்திற்குப் பின், புலம் பெயரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. அவர்களில் பலர் இந்தியாவுக்கு வந்தனர்.

இது முற்றிலும் மனிதாபிமானம் தொடர்புடையது. ஆனால் இந்தியாவில் இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்று முன் வைக்கப்படுகிறது. துன்புறுத்தப்பட்ட சமூகங்களுக்கு தங்குமிடத்தை இந்திய சட்டங்கள் அனுமதிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள், திபெத் புத்த மதத்தினர் மற்றும் பாக்கிஸ்தானிலிருந்து இந்துக்கள் ஆகியோருக்கு இங்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா முஸ்லீம்களாகி விட்டதால், இந்து வலதுசாரி அவர்களை எதிர்ப்பதோடு அவர்களை வெளியேற்றுவதற்காக ஊடகங்கள் மூலம் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுபோன்ற வகுப்புவாதவாதிகள் வங்காளதேச அகதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் பிரிட்டன் ஆட்சி காலத்தில் குடியேறியவர்கள். (வங்காளத்தில்) 1971ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தின் பின்னர் பல ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பலர் தப்பி வந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர், அவர்கள் தப்பிப்பிழைத்து வாழும் வாய்ப்ப்பை பெற்றுள்ளனர்.

1992-92 இல் மும்பை மற்றும் பிற நகரங்களில் நடந்த வன்முறைக்குப் பின்னர், அது மேலும் பரவாமல் இருக்க நடந்த பிரச்சாரத்தில் ஷாமா தல்வாய் மற்றும் இர்ஃபான் இஞ்சினியர் ஆகியோரால் மும்பையில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான அகதிகள் (வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள்) குறைந்த வேலைவாய்ப்பில் வெறுமனே உயிர்வாழ்வதற்கு மட்டுமே நீண்ட மணிநேரங்கள் செலவிடும் நிலை இருந்தது தெரிய வந்தது.

மனித உணர்வு சம்பந்தமான இந்த பிரச்சினை பாதுகாப்பு தொடர்பான தேசியவாதமாக முன்வைக்கப்படுகிறது. இது வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில் பி.ஜே.பி வெற்றி பெற பெரிய பிரச்சார திட்டமாக கையாண்டது.

மியான்மரில், ஜனநாயகமயமாக்கல் நடைமுறை மெதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும் 1962 ல் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வு மோசமாக்கியது. இராணுவத்திற்கு நிலப்பிரபுத்துவ சக்திகள் மற்றும் பல பௌத்த மதகுருக்களின் வலுவான ஆதரவு இருந்தது. இது மியான்மரில் ஜனநாயகம் தழைக்க பெரும் தடையாக உள்ளது.
(பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருந்தாலும் இராணுவம் மற்றும் முல்லாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் பௌத்த மதகுருமார்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது மியான்மர் அரசு.)
மியான்மரில் 'சங்க மகாநாயக்க கமிட்டி' என்ற பௌத்த அமைப்பு மனிதாபிமான செயல்பாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது; அஷின் விரது போன்ற பௌத்த துறவிகள், இந்தியாவின் சாக்ஷி மஹாராஜ் போலவே, முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதை பிரதான இலக்காக கொண்டு செயல்படுகின்றனர்.

மியான்மரில், இராணுவம் மற்றும் பௌத்த துறவிகள் இடையேயான உறவு வன்முறை யுத்தத்தை கடுமையாக்கி உள்ளது.
மனித உரிமைகளுக்காக நோபல் பரிசு பெற்ற மியான்மர் பிரதமராக இருக்கும் ஆங் சூகி கி நடைபெறும் இனப்படுகொலையை தடுப்பதை விட அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகிறார். மனித உரிமை நிலைபெற அவர் பெற்ற நோபல் பரிசை திரும்பப் பெற வேண்டும்.
பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதும், பங்களாதேஷிலிருந்து வந்த இந்து மக்களை இந்தியாவிலேயே தங்க வைப்பதும் என தங்களது அரசியல் லாப திட்டங்களை செயல்படுத்துகின்றனர் இந்து வலதுசாரி அமைப்பினர். இதுதான் இந்தியாவின் பிரதமராக இருப்பவர் மியான்மருக்கு சென்ற போது, இந்த அரசியல் தந்திரம் காரணமாகவே மியான்மர் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சினையில் மௌனமாக இருந்தார்.

ராம் புன்யானி (தி சிட்டிசன் இணையதளத்தில் வெளியான கட்டுரை) தமிழில் இறை நேசன்