கலாமின் புதிய உலோகம்

21arvind3அப்துல்கலாம் அணுசக்தி வல்லுனர் மட்டுமே என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அவர் மருத்துவத்துறைக்கும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.குறிப்பாக அவர் குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய ஹோவர்கிராஃப்ட் ரக

விமானத்தை வடிவமைத்தார். பொதுவாக இந்த ரக விமானங்களின் மேல் புறத்தை ஹிண்டாலியம் உலோகத்தால் போர்த்துவார்கள். அப்துல் கலாம் வடிவ மைத்த ஹோவர் ரக விமானம் தாழ்வாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதற்கென்று சிறப்பாக வலிமையான அதே வேளை உறுதியான அலுமினியம் போன்றே தோன்றும், எளிதில் கையாளும் புது உலோகத்தை தன் விமானத்திற்கு கண்டுபிடித்து ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய ஆய்வகத்தில் வைத்திருந்தார் அப்துல் கலாம். ஒரு நாள் பிரபல மருத்துவர் பிரசாத் கலாமை சந்திக்க வந்தவர் அந்த புதிய உலோகத்தைப் பார்த்தார். “கலாம்ஜிÕÕ இந்த உலோகத்தை எப்படியும் பயன்படுத்தலாம் அல்லவா? என்று கேட்டார் “ஆமாம்ÕÕ என்றார் அப்துல் கலாம். இதை நான் என்னுடைய விமானத்திற்கு மேற்போர்வையாக பயன்படுத்த கண்டு பிடித்தேன். ஏனேன்றால் எடை அதிகமாக இருந்தால் விமானம் பறப்பது சிரமமாகும். எனவே இந்த எடைகுறைந்த வலுவான உலோகத்தை கண்டு பிடித்தேன்.
“ஜீ’’ போலியோ கண்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் தற்போது மரக்கட்டை, எடை அதிகமான பொருட்களால் தயாரிக்கப்பட்ட
கருவிகளை சிரமத்தோடு பயன்படுத்து கின்றனர். இதனால் அவர்களின் அங்கங்கள் புண்ணாகி விடுகின்றன. நீங்கள் கண்டுபிடித்துள்ள இந்த எடை குறைவான புதிய உலோகம் அவர்களுக்கு உதவிபுரியும் எனவே இதை பூனாவுக்கு அனுப்பி சோதித்து விவரம் கேட்போம்” என்றார் டாக்டர் பிரசாத்.பின்நாளில் கோடிக்கணக்கான உடல் ஊனமுற்ற போலியோ கண்டவர்கள் எளிதாக நடப்பதற்கு இந்த உலோகத்தால் செய்யப்பட்ட சாதனங்கள் இன்றுவரை பயன்பட்டு வருகிறது. அதைப் போல் அவர் கண்டுபிடித்த ஹோவர் ரக விமானம் வயல்வெளிகளில் விவசாய பணிகளுக்கு பயன்படுகிறது.
இவ்வாறு அப்துல்கலாம் தன்னுடைய விண்வெளி ஆய்வுக்காக கண்டுபிடித்த ஒரு கருவி வேறு துறையான மருத்துவத் துறைக்கும் பெருமளவு பயன்பட்டது. இதைப்போல் இதயத் துடிப்புக்கு பயன்படுத்தபடும் ஒரு சாதனத்தையும் கண்டரிந்தார். விஞ்ஞானத்தில் மட்டுமல்ல மருத்துவத் துறையிலும் சாதித்தவர் டாக்டர் கிறியி அப்துல்கலாம்.