புத்தகங்கள் நல்ல வழிகாட்டி! சிறந்த நண்பன்!

Woman-reading-a-book-014

புத்தகங்கள் நமக்கு சிறந்த துணைவன். அவை நல்ல வழிகாட்டியாகவும், உண்மையான நண்பனாகவும் இருக்க முடியும். வாழ்வில் எதனை செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது என்பதை புத்தகம் படிப்பதன் மூலம் சுலபமாக எதிர்கொள்ள முடியும். இன்றைய நவீன உலகத்தில் புத்தகங்கள் படிப்பது குறைந்து வருகிறது. ஒரு ஆய்வின் போது, 11 சதவீத ஆசிரியர்கள் தான் நாளிதழ் படிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இது உண்மையிலேயே கவலையளிக்க கூடிய விஷயம். பேக்ஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பல விஷயங்களை நாம் படித்தாலும், அவற்றை அப்படியே வைத்திருக்க முடியாது. பிரின்ட் எடுத்து வைத்திருந்தால் மறக்கும்போது நினைவு படுத்திக்கொள்ள முடியும்.