ஹரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் 31 நீதிபதிகளில் கூட ஒரே ஒரு பெண்தான் உண்டு. நீதித்துறை மட்டுமல்ல, சட்டப்பேரவைகளில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இன்னும் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தில் பெண் கல்விக்கு என்று தனியான பகுதி இருக்கிறது. அம்பேத்கரும் காயிதேமில்லத் அவர்களும் அதனை உருவாக்கினார்கள். அது சட்டக்கூறு 15 –ன் உட்கூறு 3- ல் இருக்கிறது. சட்டக்கூறு 15 உட்கூறு 4- என்பது இடஒதுக்கீடு கொள்கையை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அரசியல் சாசனத்துக்கு நடந்த முதல் திருத்தம் அதுதான். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் கல்வியை வியாபாரமாக ஆக்கிவைத்திருப்பது ஆபத்தானது. மோசமானது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் மது ஒழிக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், அது தெருவுக்கு தெரு இருக்கிறது. அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்றும் சொல்கிறது அரசியல் சாசனம். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை.