எஸ்.மதுமதிம், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழலில் பொருள்களை வாங்கும்போது நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். குறிப்பாக காலாவதியான, கலப்படமான பொருள்களை விற்பது, பொதுமக்கள் ஒவ்வொரு பொருள்களையும் வாங்க நினைக்கும்போது போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறக் கூடாது. விழிப்புடன் இருந்தாலே ஏமாற்றப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவற்றின் மூலம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பொருள்கள், உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் சேவைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். தேவையான பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம்; தரமற்ற பொருள்கள், சேவைகள் காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நஷ்டஈடு பெறலாம்.
பொதுமக்கள் பெரும்பாலும் தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல் வேண்டும்; பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் விலை, தேதி, தரம், முத்திரை போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்.