அ.மார்க்ஸ், சமூக செயல்பாட்டாளர்

கோதாரி ஆணையக் காலத்திலிருந்து இங்கு கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% இருக்க வேண்டும் என்பதுதான். மோடியின் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாங்கள் அந்த இலக்கை நோக்கி நகர்வதாகச் சொன்னதைப் படித்திருப்பீர்கள். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த முறை மொத்த GDP யில் 4. 5 சதம் செலவிட்டுள்ளதாகவும் சொன்னார். ஆனால் ஆனால் 2016 - 17 க்கான Economic Survey யின் படி இப்போது ஒதுக்கப்பட்டது 2.9 சதம்தான். பெரிய அளவில் கல்விக்கான நிது ஒதுக்கீட்டில் மோடி ஆட்சி கைவைத்துள்ளது. JNU உட்படப் பல பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடும், மாணவர் சேர்க்கை அளவும் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. JNU வில் ஆய்வு நிதி ஒதுக்கீடு 83% குறைக்கப்பட்டுள்ளது.