ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்

பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசிற்கு உரிமை ஏதுமில்லை என்ற ஆளுநரின் கருத்து அதிர்ச்சி அளிக்கின்றது. பேராசிரியர்களை நியமிப்பதிலிருந்து அனைத்து பல்கலைக்கழக செயல்பாடுகளிலும் தான் முடிவெடுக்க சர்வ அதிகாரம் உள்ளது என்ற அவர் கூற்று ஆபத்தானது.
ஆளுநருக்கு அளவற்ற அதிகாரம் உள்ளதென்பதும் ஏற்கத்தக்கதல்ல. ஆளுநர் உரை என்பதும் அரசால் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி ஆளுநர் அதனை அவ்வாறே படிக்க வேண்டும் என்பதும் அரசின் மாட்சிமையை விளக்குகின்றது. பல பல்கலைக்கழகச் சட்டங்களையும் இணைத்து தமிழகத்தின் எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான சட்டமும், ஆளுநருக்கு மாறாக வேறு நபர்களை வேந்தர்களாக நியமிக்கவும் எடுத்த ஜெயலலிதாவின் முயற்சி கைவிடப்பட்டது வருந்தத்தக்கது என்று இன்று புரிகின்றது. அம்மையார் இருந்திருந்தால் ஆளுநர் இவ்வாறு பேசி இருக்க முடியுமா. ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்க்கு ஜனநாயக நெறிகளில் நம்பிக்கை கிடையாது.