சைலேந்திரபாபு, ரயில்வேதுறை ஏ.டி.ஜி.பி.

``மாணவ, மாணவிகளை ஐ.ஏ.எஸ். ஆக்குவதற்கான பயிற்சி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். இந்தியாவில் பள்ளிப்படிப்பு படித்த பிறகு 100 பேரில் 8 பேருக்குதான் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம் என்கிறார் 26 ஆண்டுகளை சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா. கல்லூரி மாணவர்களே, உலகத் தலைவராக மாற வேண்டிய காலத்தில் நீங்கள் காலத்தை வீணாக்காதீர்கள்."