வகுப்பறையில் துப்பாக்கி! அனுமதிக்கும் பல்கலைக் கழகம்!

gettyimages
முந்தைய சட்ட விதிகளின் படி துப்பாக்கிகள் இல்லாத இடமாக இருந்து வந்த அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள புதிய உத்தரவு ஒன்று அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பல்கலைத் தலைவர் கிரேக் ஃபென்வீஸ் கூறும்போது, “துப்பாக்கிகள் பல்கலை வளாகத்தில் தேவையற்றது. எனவே இந்த புதிய அனுமதி எனக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது” என்றார். (அவரையே சுட்டு விட்டால்..?) ஆனாலும் (புத்திசாலித்தனமாக!) துப்பாக்கிகளை மறைத்தே வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவும் இதில் உள்ளது.

துப்பாக்கிகள் யாரிடம் இருக்கிறது என்று தெரியாத நிலையில் சுதந்திரமாக கருத்துக்கள் தெரிவிக்கும் சூழலுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று சில மாணவ அமைப்புகள் இந்த உத்தரவை எதிர்த்துள்ளன.