இஸ்லாமியக் கல்வி

குர்ஆன் வாசிப்பு முறைகள் மற்றும் குர்ஆனை அணுகும் வழிகள், ஹதீஸ்களிலிருந்து அடிப்படையை அறிவது, இஸ்லாமிய வரலாறு, அரபு மொழி பற்றிய அறிமுகம், இஸ்லாம் பற்றிய விளக்கம், இஸ்லாமியச் சட்டங்களும் நீதிமுறைகளும்,

இஸ்லாமியக் கோட்பாட்டை மேம்படுத்தும் முறைகள், மார்க்கத்தில் நிகழ்ந்த முன்னேற்றங்கள், இஸ்லாமிய தத்துவம், இஸ்லாமியப் பொருளியல், மக்கள் நலனில் இஸ்லாம், இந்தியச் சூழலில் இஸ்லாமியப் பண்பாடு, மத்திய கால இந்திய வரலாறு, இஸ்லாமும் ஆண்களும் பெண்களும், பெரு நிலப்பரப்பில் இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய இயக்கங்கள்,

இஸ்லாமும் மேற்குலகும், இஸ்லாமிய உலகினில் பெண்களுக்கான சட்டங்கள், சூஃபியிசம் பற்றிய ஒரு பார்வை என்பன போன்ற பாடங்களை நான்கு வகையாகப் பகுத்து கற்பிக்கின்றனர்.

இப்படிப்பை முடித்தவர்களுக்கு ஒரு முழுமையான இஸ்லாமியக் கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறன் ஏற்படும். மேலும் இந்த எம்.ஏ. இஸ்லாமிக் பட்டப்படிப்பில் அப்சல் உலமா முடித்தவர்கள், பி.ஏ.அரபி பயின்றவர்களும் தாராளமாகச் சேரலாம்.

மேலும் அப்சல் உலமாவுக்கான பயிற்சியையும், கற்பித்தலையும் பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. அவற்றில் சேர்ந்தும் முறையாக மார்க்கத் தெளிவைப் பெறலாம். இதுபோன்ற கல்வி பெற்றவர்கள் வழக்குறைஞராகவோ, காவல் பணியிலோ, இதர அரசுப் பணியிலோ ஈடுபடும்போது மற்றவர்களைவிட சமூகச் சிந்தனையுள்ளவர்களாக விளங்க முடியும். பிரிஸ்டன் இன்டர்நேஷனல் கல்லூரியிலும் பி.ஏ., இஸ்லாமிக் ஸ்டடீஸ் கற்பிக்கப்படுகிறது.

www.prestonchennai.ac.in