கட்டடக் கலை

architecture
தங்குமிடம் என்பது ஆரம்பத்தில் அடிப்படைத் தேவைக்காக இருந்தது. பாதுகாப்பு மற்றும் சூழல் கருதி கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. இன்று கட்டடம் என்பது பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விஷயமாக இருக்கின்றது.
கட்டடக் கலை என்பது மனித முன்னேற்றத்துடன், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், அறிவுத்துறையாலும் ஒழுங்கமைக்கப்பட்ட போது, கட்டடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது.

ஆரம்பகால மனிதர்களிம் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாக இருந்தது. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகரம் சார்ந்த சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டடங்களும் அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டடங்கள் எனப் புதிய கட்டடவகைகளும் பெருகத்தொடங்கின. இன்று கட்டடக் கலை (Architecture) படித்தவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
B.Arch (கட்டடக் கலை) படிப்பு தமிழகத்தில் குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இந்தப் பிரிவில் சேர்வதற்கு கட்டாயம் NATA (National Aptitude Test in Architecture) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
+2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண் மற்றும் NATA தேர்வு மதிப்பெண் சேர்த்து கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.
B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருடா வருடம் கலந்தாய்வு (counseling) நடத்தி வருகிறது. விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். சென்னை BSA பல்கலைக் கழகம் மற்றும் சென்னை ஆவடி ஆலிம் முஹம்மது ஸாலிஹ் கல்லூரியில் சிறப்பான முறையில் B.Arch படிப்பு சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது.