இஸ்லாமிய வங்கியியல்

Dubai Islamic Bank 3 tcm87-21629
சென்ற வருடம் ஜூன் மாதம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய வங்கியியல் கருத்தரங்கில் மலேசிய நாட்டின் நீதிபதி அபூபக்கர் பங்கேற்று பேசும்போது : மலேசியாவில் இயங்கும் இஸ்லாமிய வங்கி தற்போது சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. 75க்கும் அதிகமான நாடுகளில் இந்த வங்கி செயல்படுகிறது. இஸ்லாமிய வங்கி பாதுகாப்பானதாகவும், வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இங்கிலாந்து மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மாணவர்கள், இஸ்லாமிய வங்கியின் கட்டமைப்பு பற்றி ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இஸ்லாமிய வங்கியியல் பாடத் திட்டம் இங்கிலாந்து நாட்டில் ஒரு கட்டாயப் பாடமாக உள்ளது. இஸ்லாமிய வங்கியியல் திட்டம் இந்தியாவில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு வரலாம் என்றார்.

இஸ்லாமிய வங்கியியல் என்பது வளர்ந்து வரும் ஒரு துறை. இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தாலும், 20 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருக்கும் வட்டி சார்ந்த வங்கிச் செயல்பாடுகளுக்கு மாற்றாக இஸ்லாமிய அறிஞர்களால் இஸ்லாமிய வங்கியியல் முன் வைக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இன்று இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் விரும்பப்படுகிற வங்கியாக இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அதற்கு முதன்மைக் காரணம் வட்டியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமிய வங்கியின் நடைமுறையாகும்.
இஸ்லாமிய வங்கி முறைகளில் வட்டி இல்லை, சூதாட்டம் இல்லை, ஹராம் ஹலால் பேணப்படுவது ஆகியவை சிறப்பான அம்சமாகும். முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இஸ்லாமிய வங்கியில் பங்கு பெற்று வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் வழி தெரியாமல் தவித்த அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இஸ்லாமிய வங்கியியல் முறையை பின்பற்றி பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட வழிகண்டன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளாதார சிக்கலுக்கு சிறந்த மாற்று இஸ்லாமிய வங்கி முறையே என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி இஸ்லாமிய பொருளாதாரச் சட்டங்களின் அடிப்படையில் நிதி நிறுவனம் துவங்க கேரள அரசுக்கு அனுமதியளித்துள்ளது. உலகின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இஸ்லாமிய வங்கியியல் படித்தவர்களுக்கு உலகம் வேலை வாய்ப்பு பெருகி வருகிறது.

+2 வில் வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்து படித்த மாணவர்கள் B.Com, B.A.Economics, B.B.A, BCA, BE - IT போன்ற நிதி மற்றும் தகவல் தொடர்பு சார்ந்து பட்டம் பெறும் மாணவ / மாணவியர் இஸ்லாமிய வங்கியியல் படிப்பை பட்டயப் படிப்பாகவோ, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பாகவோ கூடுதலாகப் படிக்க வேண்டும்.
இளங்கலை படிக்கும் போதே அரபுமொழி அறிவு அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய வங்கி குறித்தான தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உயர்ந்த ஊதியம் மற்றும் குடும்ப விசாவோடு அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கு எளிய வழி இஸ்லாமிய வங்கியியல் படிப்பது.
Institute of Islamic Banking Finance & Insurance
Periamet, Chennai - 600003.
Phone 044- 4323 5434
Phone 044- 4323 5464
Mobile - Tamil Nadu : 8438281503
Mobile - Karnataka : 9449240080
http://www.iibfi.com/index2.php

nternational Islamic University Malaysia
http://www.iium.edu.my/iiibf

MA in Finance and Investment (Islamic Finance and Banking)
Institute of Islamic banking and Insurance (IIBI)
London, United Kingdom
Telephone + 44 20 7433 0840
Fax + 44 20 7433 0849
Email இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
http://www.islamic-banking.com/